SMS இணைப்புகளில் மோசடி குறித்து ஜேபிஜே எச்சரிக்கை

சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), தங்கள் துறையிலிருந்து வந்ததாகக் கூறப்படும் குறுஞ்செய்தி (SMS) உரைகளில் உள்ள இணைப்புகளைக் அழுத்துவதற்கு எதிராக பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஓட்டுநர் உரிம விஷயங்கள் தொடர்பான இணைப்புகளைக் கொண்ட குறுஞ்செய்திகளை (SMS) ஜேபிஜே ஒருபோதும் வெளியிடவில்லை என்று அதன் இயக்குநர் பாட்லி ராம்லி கூறினார்.

“ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பான இணைப்புகளைக் கொண்ட குறுஞ்செய்திகள் (SMS) குறித்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன.

“MyJPJ என்ற பெயரில் அனுப்பப்படும் இந்தச் செய்திகளில் பொதுமக்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்ட மோசடி இணைப்புகள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

JPJ சேவைகளை வழங்கும் அங்கீகரிக்கப்படாத தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், மோசடி மற்றும் நிதி இழப்புகளைத் தடுக்க கூடுதல் தகவலுக்கு ஜேபிஜேவைப் பார்வையிடவும் அல்லது தொடர்பு கொள்ளவும் ராம்லி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

“பொதுமக்களின், குறிப்பாக ஜேபிஜே வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் ஜேபிஜே உறுதிபூண்டுள்ளது.

“https://jpj.spab.gov.my/ இல் உள்ள ஜேபிஜே புகார் தளத்தின் மூலம் அதிகாரப்பூர்வ புகார்களைப் பதிவு செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

 

 

-fmt