கடந்த சனிக்கிழமை காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் மலேசிய இஸ்லாமிய அமைப்புகளுக்கான ஆலோசனைக் குழுவைச் (Malaysian Consultative Council for Islamic Organisations) சேர்ந்த எட்டு மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசா மற்றும் பாலஸ்தீனத்தின் பிற பகுதிகளில் நடந்து வரும் வன்முறைக்கு எதிராக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒரு வலுவான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த, நோயாளிகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் உதவி செய்த மாபிம் தன்னார்வலர்கள்மீதான கொலை மற்றும் அட்டூழியங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.”
“தொடர்ச்சியான வன்முறைக்கு எதிராக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது,” என்று அவர் இன்று பினாங்கு மேம்பாட்டுக் கழக (PDC) அலுவலகத்தில் ஒரு சிறப்பு பினாங்கு மேம்பாட்டுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியபின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று, வடக்கு காசாவின் பெய்ட் லஹியாவில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு நடந்த தாக்குதலில் எட்டு பாலஸ்தீனிய தொழிலாளர்கள் தியாகிகளாகியதாக மாபிம் தலைமை நிர்வாக அதிகாரி சானி அரபி அப்துல் ஆலிம் உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள்
சியோனிச ஆட்சியின் தொடர்ச்சியான தாக்குதல்களால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்குத் தொழிலாளர்கள் கூடாரங்கள் அமைத்துக் கொண்டிருந்தபோது இந்த வான்வழித் தாக்குதல் நடந்தது.
பலியானவர்கள் மஹ்மூத் யஹ்யா அல்-சர்ராஜ், பிலால் ஹோசம் ஒகீலா, மஹ்மூத் சமீர் ஒசெலிம், மஹ்மூத் கலீத் ஒசெலிம், முகமது அல்-கஃபீர், ஹஸெம் கரீப், பிலால் அபு மாதர் மற்றும் அஹ்மத் ஹமாத் என அடையாளம் காணப்பட்டனர்.
பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ், பினாங்கு மாவட்ட தலைமை நிர்வாக அதிகாரி அஜீஸ் பக்கார், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார், கருவூல பொதுச் செயலாளர் ஜோஹன் மஹ்மூத் மெரிக்கன், அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு இயக்குநர் ஜெனரல் சொல்லேஹுதீன் அலியுபி ஜகாரியா மற்றும் பினாங்கு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பினாங்கு மலை கேபிள் கார், முதியாரா லைன் லைட் ரயில் போக்குவரத்து மற்றும் பகத் பாரு மதனி மலிவு விலை வீட்டுவசதி முயற்சி உள்ளிட்ட பினாங்கில் பல்வேறு வளர்ச்சி மற்றும் மூலோபாய திட்டங்கள்குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.