இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் இன்று காலை 6.22 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில், இந்தோனேசியாவின் சிபோல்காவிலிருந்து கிழக்கே 41 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மலேசியாவின் பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மேலாக்கா, ஜோகூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டது.
இருப்பினும், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்பதை அந்தத் துறை உறுதிப்படுத்தியது.