மலாக்கா எழுத்தாளர் கவிஞர் செல்வராஜு காலமானார்

மலாக்கா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் கவிஞருமான செல்வராஜு மதலமுத்து நேற்று(20/3/25) வியாழக்கிழமை பிற்பகலில் காலமானார். அவருக்கு வயது 71.

சிறிதுகாலம் நோயுற்றிருந்த அவர், எண் ஏ, லோரோங் பிராயா, ஜாலான் பண்டார் ஹிலிர், மலாக்கா, எனும் முகவரியில் உள்ள தமது இல்லத்தில் காலமானார் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவருக்கு எலிஸபத் எனும் மனைவியும் இரு மகள்களும் ஒரு மகனும் மூன்று பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

சூழலுக்கு ஏற்றவாறு உடனுக்குடன் சிறப்பான கவிதைகளை புனையும் அதீத ஆற்றலைக் கொண்ட செல்வராஜு தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

தமது கடைசி மூச்சு வரையில், இந்திய இளைஞர்கள் தொழில்துறையில் முன்னேறுவதற்கான பல்வே நிகழ்ச்சிகளை அவர் முன்னின்று ஏற்பாடு செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் தலைநகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ‘காப்புறுதி கவிஞர்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட செல்வராஜு, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் கிரேட் ஈஸ்டர்ன் ஆயுள் காப்புறுதி நிறுவனத்தில் ஒரு மூத்த நிர்வாகியாக பணியாற்றி வந்துள்ளார்.

அவருடைய நல்லுடல் நாளை(22/3/25) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, அடக்க திருச்சடங்கு திருப்பலிக்காக, ஜாலான் மலாக்கா ராயா 14, தாமான் மலாக்கா ராயா, மலாக்கா, எனுமிடத்தில் உள்ள ‘சேப்பல் அஃப் தி அசம்ப்ஷன்’ தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிறகு புக்கிட் ஜெலுத்தோங் கத்தோலிக கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.

மேல் விவரங்களுக்கு:

ஜஸ்டின்:           010-2980512

செபஸ்தியன்:010-8270360

தகவல்: இராகவன் கருப்பையா