சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் தலைவர் இசுவான் அகமது காசிம், இந்த மே மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் தேர்தலில் 2025-2028 காலத்திற்கான தேசிய துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தனது விருப்பத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தேர்தல் வெறும் கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, 16வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பிகேஆர் இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதும் ஆகும் என்ற நம்பிக்கையே தனது முடிவை உந்துவதாகக் கோத்தா தமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.
“பிகேஆர் இளைஞர்கள் என்பது வெறும் கட்சிப் பிரிவைவிட அதிகம்; அது எங்கள் போராட்டத்தின் முன்னணி வரிசை. நீதிக்காகப் போராடுவது வெறும் சொல்லாட்சி அல்ல, ஆனால் எனது மாணவர் பருவத்திலிருந்தே நான் உறுதியாகப் பின்பற்றி வரும் ஒரு கொள்கையாகும்”.
“பிரதமர் பிகேஆரைச் சேர்ந்தவர் என்பதால், அன்வார் இப்ராஹிமின் தலைமை வலுவாக இருப்பதையும், கட்சி இழந்த இடங்களை மீண்டும் பெறுவதையும் உறுதி செய்வது இளைஞர் பிரிவின் கடமையாகும்,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பிகேஆர் இளைஞர் கட்சியின் துணைத் தலைவர் பதவியைத் தற்போது பிரதமரின் அரசியல் செயலாளராகவும் இருக்கும் கமில் அப்துல் முனிம் வகிக்கிறார்.
வரவிருக்கும் பி. கே. ஆர் தேர்தலில் தற்போது துணை இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலீம் வகித்து வரும் பி. கே. ஆர் இளைஞர் தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தைக் கமில் முன்பு உறுதிப்படுத்தியுள்ளார்.