மியான்மாரில் மண்டலே அருகே நேற்று தாக்கி அண்டை நாடான தாய்லாந்தை உலுக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பினாங்கு தற்போது பாதிக்கப்படவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள கோம்டார் மற்றும் பாலங்கள் போன்ற கட்டிடங்கள் குறிப்பிட்ட அளவிலான பூகம்பங்களைச் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
“அவை ஒரு குறிப்பிட்ட அளவிலான பூகம்பங்களைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ளன”.
“அவற்றின் வடிவமைப்பு ரிக்டர் அளவுகோலில் சுமார் 7 வரை அளவிடும் திறன் கொண்டதுல்,” என்று அவர் இன்று பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த ரஹ்மா மடானி விற்பனை நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மாநிலத்தில் உள்ள உயரமான கட்டிடங்களைத் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
நேற்றைய நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பினாங்கில் உள்ள கோம்டார் மற்றும் ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பல பகுதிகளிலும், பட்டர்வொர்த்தைச் சுற்றியுள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.