நேற்று, மெனோரா சுரங்கப்பாதைக்கு அருகில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (பிளஸ்) தெற்கு நோக்கிச் செல்லும் KM264.7 இல் நடந்த விபத்தில் இரண்டு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
ஈப்போ போலீஸ் தலைவர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அஹ்மத் ஒரு அறிக்கையில் சிறுமி நைராய் ஃபலிஷா அப்துல் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
அவரது பெற்றோர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஹீம், 29, மற்றும் நூர் பாத்திஹா பத்ருல் ஹிஷாம், 25, ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜைனாலின் கூற்றுப்படி, ரஹ்மான் தான் ஓட்டி வந்த பெரோடுவா பெஸ்ஸாவின் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் சாலையின் இடது பக்கமாகச் சென்று வடிகாலில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
முன்னதாக, ஈப்போ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் தனது முகநூல் பக்கத்தில், மெனோரா கட்டுப்பாட்டு நிலையத்திற்கு மாலை 6.45 மணிக்கு விபத்துகுறித்து அவசர அழைப்பு வந்ததாகக் கூறியது. குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
படுகாயமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் அவசர மருத்துவ மீட்புப் பிரிவிலிருந்து ஆரம்ப சிகிச்சையைப் பெற்றனர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காகச் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
முன்னதாக, விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.