தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செர்ரி மலேசியா 50 கார்களை வழங்குகிறது – மாநில ஆட்சிக்குழு

புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 50 கார்களை வழங்குவதாக ஆட்டோமொபைல் நிறுவனமான செர்ரி மலேசியா தெரிவித்துள்ளது.

இந்தக் கடினமான காலகட்டத்தில் வேலைக்குச் செல்லவும், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் வாகனங்கள் தேவைப்படக்கூடிய பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே நிறுவனத்திற்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் நோக்கமாகும் என்று சிலாங்கூர் மாநில நிர்வாகக் கவுன்சிலர் கூறினார்.

“விண்ணப்பங்கள் ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இருக்கும், இதை எனது (கின்றாரா சட்டமன்ற உறுப்பினர்) அலுவலகத்திலோ அல்லது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன் அலுவலகத்திலோ செய்யலாம்,” என்று அவர் கூறினார்.

சுபாங் ஜெயாவின் செக்சன் 1/3 புத்ரா ஹார்மோனியில் தீ விபத்து நடந்த இடத்தையும் பாதிக்கப்பட்டவர்களையும் பார்வையிட்டபிறகு, முதலீடு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான மாநில ஆட்சிக்குழு இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

ரிம 500,000 பங்களிப்புக்காகச் செர்ரி மலேசியாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க மாநில அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற மேலும் பல வாகன நிறுவனங்களை வரவேற்பதாக இங்கா (மேலே) கூறினார்.

இதற்கிடையில், தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக இங்கா கூறினார்.

தீ விபத்து நடந்த இடத்தில் சுமார் 20 நிறுவனங்கள் விசாரணைகளையும் பாதுகாப்பு சோதனைகளையும் தொடங்கியுள்ளன.

சம்பந்தப்பட்டவர்களில் ராயல் மலேசியா காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை,  Tenaga Nasional Berhad, பொதுப்பணித் துறை, உள்ளூர் அரசாங்க அதிகாரசபை மற்றும் மாவட்ட அலுவலகம் ஆகியவை அடங்கும்.