மலேசியா மீதான அமெரிக்காவின் வரிகள் குறித்து விவாதிக்க மக்களவையின் சிறப்புக் கூட்டம் மே 5 ஆம் தேதி நடைபெறும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தினார்.
“மே 5,” என்று பிரதமர் துறையின் ஈகைத் திருநாள் கொண்டாட்டத்தில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
முன்னதாக, சீன மொழி நாளிதழ் ஒன்று பிரதமர் அலுவலகம் இந்த விவகாரம் குறித்த தகவல்களை வெளியிட்டதாக செய்தி வெளியிட்டது.
அமெரிக்க வரிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதிப்பதே சிறப்புக் கூட்டத்தின் நோக்கமாகும்.
-fmt