அதிகாலையில் பெய்த மழை, கிளாங் பள்ளத்தாக்கு முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில், ஒரு சர்வதேச பள்ளியின் சுவர்கள் நிலச்சரிவில் இடிந்து விழுந்தன, மேலும் ஒரு வகுப்பறை, ஆசிரியர் அறை, நூலகம் மற்றும் இரண்டு கார்கள் சேதமடைந்தன.
தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் நிலச்சரிவு
இதற்கிடையில், சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஐமன் அதிரா சாபுவும் தனது தொகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.
செப்பாங்கில் நிலச்சரிவு
புன்சாக் ஆலமில், தாமன் ஶ்ரீ ஆலமில் உள்ள நீர் தேக்க அணை காலைச் சுமார் 5.30 மணியளவில் உடைந்து, அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
சமீபத்தில் அணை உடைந்தது இது இரண்டாவது முறையாகும், கடைசியாக டிசம்பரில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
பயா ஜராஸ், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, ஷா ஆலம், மற்றும் கம்போங் பாரு சுங்கை பூலோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.
பாயா ஜராஸில், திடீர் வெள்ளம் 80 வீடுகளைத் தாக்கியது, இருப்பினும் வெள்ள நீர் வடிந்துவிட்டதால் யாரும் வெளியேற்றப்படவில்லை.