சனிக்கிழமையன்று டத்தாரன் மெர்டேக்காவில் நடைபெற்ற பேரணி தொடர்பாக நான்கு புகார்களைக் காவல்துறையினர் பெற்றுள்ளனர், அதில் பிரதமர் அன்வார் இப்ராஹிமைப் போல் இருந்த உருவ பொம்மை தேசிய மசூதி அருகே பிரம்பால் அடிக்கப்பட்டது தொடர்பான ஒரு வழக்கு அடங்கும்.
மீதமுள்ள மூன்று அறிக்கைகள் ட்ரோன்களின் பயன்பாடு தொடர்பானவை என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் உசுப் ஜான் முகமது தெரிவித்தார்.
அவர், உருவ பொம்மை வழக்கு புக்கிட் அமானில் உள்ள வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவுக்கு 1948-ஆம் ஆண்டு தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 41, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504 மற்றும் 1998-ஆம் ஆண்டுத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-ன் கீழ் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“ட்ரோன்கள் தொடர்பான மற்ற மூன்று அறிக்கைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பேரணி அமைதியாகவும் ஒப்புதலுடனும் நடத்தப்பட்டாலும், பேரணியில் கலந்துகொள்பவர்களின் எந்தவொரு தவறான நடத்தையையும் காவல்துரையினர் விசாரிப்பார்கள் என்று உசுஃப் கூறினார்.

























