மக்களவை சபாநாயகர் எடுக்கும் முடிவுகள் நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல, என்பதை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்தது. இதன்மூலம் ஜோஹரி அப்துல் மீது நீதிமன்ற மறுஆய்வைத் தொடங்க பெர்சத்து மேற்கொண்ட இரண்டாவது முயற்சியும் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 63(1) இன் அடிப்படையில் அமைந்தது என்பதை பெர்சத்துவின் வழக்கறிஞர் சேதன் ஜெத்வானி மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்றம், அவை அல்லது அதன் குழுக்களால் எடுக்கப்படும் முடிவுகள் நீதித்துறை மறுஆய்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்று இந்த விதி கூறுகிறது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட ஜோஹாரி (மேலே) மற்றும் கட்சியை விட்டு வெளியேறிய நான்கு எம்.பி.க்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்துப் பெர்சத்து மேல்முறையீடு செய்தது.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதி அமர்ஜீத் சிங், மனுவை நிராகரிப்பதில் நீதிமன்றம் ஒரு முன்னுதாரணத்திற்கும் பிரிவு 63(1)க்கும் கட்டுப்பட்டிருப்பதாகத் தீர்ப்பளித்திருந்தார்.
ஜொஹாரி மற்றும் நான்கு Gabungan Rakyat Sabah (GRS) எம்பிக்கள் – அர்மிசான் அலி (Papar), கைருல் ஃபிர்தௌஸ் அக்பர் கான் (Batu Sapi), ஜொனாதன் யாசின் (Ranau) மற்றும் மத்பாலி மூசா (Sipitang) ஆகியோரை பெர்சத்து பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டு பெர்சத்துவை விட்டு வெளியேறியபிறகு, எம்.பி.க்களின் இடங்களை ஜோஹாரி காலி செய்யாமல் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக அது கூறியது.
கட்சியிலிருந்து விலகிய நான்கு பேரும் ஜிஆர்எஸ் கூட்டணியின் கீழ் உள்ளனர்.
அந்த ஆண்டின் ஜனவரி 16ஆம் தேதி எழுதிய கடிதத்தில் ஜொஹாரி, இடங்களைக் காலியாக்க வேண்டிய அவசியம் ஏன் இல்லை என்பதை விளக்கி, பெர்சத்துவுக்கு எழுதியிருந்தார். இது மனுவைத் தாக்கல் செய்யும் முன்பாக நடந்தது.
இந்த முடிவுக்கு எதிராகப் பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வீர்களா என்பது குறித்து பெர்சத்துவின் அறிவுறுத்தல்களுக்காகத் தனது குழு இன்னும் காத்திருப்பதாகச் சேதன் கூறினார்.

























