புத்ராஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ராம்லியின் 12 வயது மகன் ஊசியால் தாக்கப்பட்டதை அடுத்து, அவரது மனைவிக்கு மிரட்டல் செய்திகளை அனுப்பிய நபரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார், இந்தச் சம்பவம்குறித்து ரஃபிசி நேற்று காவல்துறையில் புகார் அளித்ததாகச் சினார் ஹரியான் தெரிவித்தார்.
“அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணின் உரிமையாளரைக் கண்டறிய காவல்துறை பல தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும்”.
“இந்த வழக்கிற்கான விசாரணை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 இன் கீழ் நடத்தப்படுகிறது,” என்று ஷாசெலி கூறினார்.
பிரிவு 507 என்பது பெயர் குறிப்பிடாமல் அனுப்பப்படும் தகவல்மூலம் செய்யப்படும் குற்றவியல் மிரட்டல்களைப் பற்றியது.
நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது ரஃபிஸி ரம்லி
நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ரஃபிஸி கூறுகையில், ஒரு செய்தியில் தனது மகனுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்படும் என்று அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிகிறது.
“அந்தச் செய்தியில், (வாயை மூடு! தொடர்ந்தால், எய்ட்ஸ்!) என்று இருந்தது. அந்தச் செய்தியில் மூன்று சிரிஞ்ச் எமோஜிகள் இருந்தன,” என்று ரஃபிஸி செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
“என்னுடைய பார்வையில், இங்குச் சொல்ல வரும் செய்தி இதுதான்: வழக்குத் தொடரப்படுவதற்கு நான் பயப்படவில்லை, நான் ஏற்கனவே சிறைவாசத்தை அனுபவித்துவிட்டேன், மேலும் எனது பதவியை இழப்பது பற்றி எனக்குக் கவலையில்லை.”
“எனவே, என் மனைவிமூலம் என் முடிவைப் பாதிக்க எளிதாக இருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
முன்னாள் பொருளாதார அமைச்சர், தனது மகனுக்கு எதிரான தாக்குதலைக் கருப்பு உடை அணிந்து முழு முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த இரண்டு நபர்கள் நடத்தியதாகக் கூறினார்.
அறியப்படாத அந்தப் பொருளால் ஏதேனும் நீண்டகால பாதிப்புகள் ஏற்படுமா என்பதை அறிய, தனது மகன் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழக்கமான இரத்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

























