“பொய்யான ஜாராவின் பிரேதப் பரிசோதனை குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிக்டாக் பயனரைக் கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை”

முதலாம் படிவம் மாணவி ஜாரா கைரினா மகாதீரின் பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட அறுவை சிகிச்சை நிபுணர் என்று பொய்யாகக் கூறிய டிக்டாக் பயனரை அடையாளம் காண எம்சிஎம்சி மற்றும் காவல்துறை பணியாற்றி வருகின்றன.

தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் தெரிவித்ததாவது, அந்த நபர் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில் தாம் இருந்ததாகக் கூறினார். ஆனால் சுகாதார அமைச்சின் சரிபார்ப்பில், அவர் நிபுணரும் அல்ல, அமைச்சின் பணியாளரும் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

“இந்த நபர் டிக்டோக் நேரடி அமர்வின்போதுல்வேறு தவறான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார், இது அவரது கூற்றுகள் உண்மை என்ற தோற்றத்தை உருவாக்கியது”.

“துரதிர்ஷ்டவசமாக, இந்த உள்ளடக்கம் வைரலாகி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று அவர் இன்று ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் (மலாய் மொழி வளாகம்) கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவிற்கான தேசிய மாதம் மற்றும் ப்ளை தி ஜாலூர் ஜெமிலாங் 2025 பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வழக்கைக் கையாளும் தடயவியல் நிபுணர்களிடமிருந்து சரிபார்க்கப்பட்ட தகவல்களைப் பெற்ற சுகாதார துணை இயக்குநர் ஜெனரல் (மருத்துவம்) டாக்டர் நோர் அசிமி யூனுஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் சுகாதார அமைச்சர் சுல்கேப்லி அஹ்மட் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியதாகப் பஹ்மி கூறினார்.

“டிக்டோக் பயனர் தடயவியல் நிபுணர் அல்ல என்றும், பரப்பப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை என்றும் தடயவியல் குழுவின் தலைவர் உறுதிப்படுத்தினார்”.

“அந்த நபர் தனது டிக்டாக் கணக்கைத் தனிப்பட்டதாக மாற்றியுள்ளார், இதனால் அதிகாரிகள் அவரைத் தொடர்புகொள்வது கடினமாகிவிட்டது,” என்று பஹ்மி கூறினார், சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத கூற்றுகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாறக் கூடாது என்பதை நினைவூட்டினார்.

தவறான தகவல்களைப் பரப்புவது கடுமையான குற்றமாகும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரிம 500,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

கோத்தா கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனை I இல் ஒரு நாள் முன்னதாக அனுமதிக்கப்பட்ட பின்னர், ஜூலை 17 அன்று ஜாரா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜூலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்குப் பப்பார் பகுதியில் உள்ள Sekolah Menengah Kebangsaan Agama Tun Datu Mustapha விடுதிக்கு அருகில் உள்ள வடிகாலில் அவர் மயக்க நிலையில் காணப்பட்டார்.