படிவம் 1 மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணத்தில் ஏதேனும் குற்றவியல் கூறுகள் ஈடுபட்டுள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கான விசாரணை செப்டம்பர் 3 ஆம் தேதி கோட்டா கினாபாலு மரண விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கும்.
மரண விசாரணை அதிகாரியாகச் செயல்படும் சபா மாநில நீதிமன்ற இயக்குநர் அஸ்ரீனா அஜீஸ், இன்று வழக்கு குறிப்பிடலின் போது தேதிகளை நிர்ணயித்ததாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணை நடவடிக்கைகள் செப்டம்பர் 3-4, 8-12, 17-19 மற்றும் 22-30 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
சபா மாநில வழக்கு விசாரணை இயக்குநரால் கோரப்பட்ட விசாரணைக்கு மொத்தம் 195 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி, ஏதேனும் குற்றவியல் கூறுகள் ஈடுபட்டுள்ளதா என்பது உட்பட ஜாராவின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை நிறுவ விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி அறைகள் தெரிவித்துள்ளது.
ஜூலை 16 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு சபாவின் பாப்பரில் உள்ள தனது பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் அவர் பின்னர் மயக்கமடைந்து காணப்பட்டார். மறுநாள் அவர் குயின் எலிசபெத் I மருத்துவமனையில் அனுமதித்த பின் இறந்தார்.
பகடிவதைப்படுத்துதல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ஆகஸ்ட் 9 அன்று தோண்டி எடுக்கப்பட்டது.
-fmt

























