போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மலேசியாகினி தொடர்பு கொண்டபோது சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் இதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், இந்த விஷயம்குறித்து விரிவாகக் கூற அவர் மறுத்துவிட்டார்.
இந்தக் கைது நேற்று மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

























