கிள்ளானில் உள்ள கம்போங் பாப்பானில் இன்று வீடுகள் உடைப்பு நடவடிக்கையின் போது தடுத்து வைக்கப்பட்ட மூன்று நபர்களில் PSM துணைத் தலைவர் S அருட்செல்வனும் ஒருவர்.
மற்ற இருவரும் ஆர்வலர் M மைத்ரேயர் மற்றும் குடியிருப்பாளர்களின் பிரதிநிதி M லோகேஸ்வரன் ஆவர்.
அரசு அதிகார்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதை தடுத்தது தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186 இன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாக மைத்ரேயர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“மேலும் விசாரணைக்காக நாங்கள் இப்போது கிள்ளான் சிலாத்தான் மாவட்ட காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.
X – பதிவில், முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ, மூவரையும் உடனடியாக விடுவிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.
“மனித உரிமை பாதுகாவலர்கள் PSM இன் அருள் மற்றும் மேலும் இருவர் ஒரு குடும்பத்தின் வீட்டை இடிப்பிலிருந்து பாதுகாக்க காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டபோத்து கைது செய்யப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

























