“திறந்தநிலை போட் (Open-pod) முறையிலான மின்னணு சிகரெட்டுகளில் (vapes) தொடங்கி, இந்த ஆண்டிற்குள் அனைத்து வகையான வேப்புகளையும் தடை செய்யச் சுகாதார அமைச்சு இலக்கு வைத்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமது தெரிவித்துள்ளார்.”
பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் 2024ஐ அமல்படுத்துவதில் அமைச்சகம் சமரசம் செய்யாது என்று அவர் கூறினார்.
“சிகரெட் மற்றும் வேப்பிங் (vaping) தொடர்பான பிரச்சினையில், எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்கால சந்ததியினரை தொற்றாத நோய்கள் மற்றும் ‘பாப்கார்ன் லங்’ (popcorn lung) போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கான நமது தார்மீகப் பொறுப்பே இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதாகும்.”
“முன்னதாகவே இந்த விவகாரம்குறித்து நான் எச்சரிக்கைகளை விடுத்துள்ளேன், குறிப்பாகத் திறந்தநிலை ‘வேப்’ (open-system vapes) முறைகள்குறித்து. இதற்குப் பல நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றாலும், அதன் முதல் கட்டமாகத் திறந்தநிலை பாட் (open-pod system) முறையைத் தடை செய்ய வேண்டும். ஏனெனில், இது பல்வேறு செயற்கை போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தவறாகக் கையாளப்படுகிறது,” என்று இன்று புத்ராஜயாவில் 2026 புத்தாண்டுச் செய்தியை வழங்கியபின்னர் ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.
“திறந்தநிலை போட் சிஸ்டம் (open-pod system) வகை வேப் தயாரிப்புகளின் விற்பனை மற்றும் பயன்பாடு ஆகிய இரண்டிற்கும் தடை விதிக்கப்படும் என்று சுல்கேப்ளி கூறினார்.”
இந்த விவகாரம் விரைவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.
“மற்றொரு முன்னேற்றமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் பிரீமியம் எக்கனாமி (premium economy) தரத்திலான சுகாதார சேவைகளை வழங்கும் ‘ராக்கான் கே.கே.எம்’ (Rakan KKM) திட்டம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்கப்படும் என்று சுல்கேப்ளி கூறினார்”.
“2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ராக்கான் கே.கே.எம்முன்முயற்சியின் கீழ் முதல் நோயாளிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவோம்”.
“இந்த ‘பிரீமியம்-எகனாமி’ முறைமூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம், மற்ற பிரிவுகளுக்குப் பயன்படுத்தப்படும் (cross-subsidies). இது அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் வெளியேறாமல் அங்கேயே தொடர்ந்து பணியாற்ற உறுதுணையாக இருக்கும்.”
“சைபர்ஜெயா மருத்துவமனைதான் இந்தச் சேவையை வழங்கும் சுகாதார அமைச்சின் முதல் மருத்துவமனையாக இருக்கும் என்றும், அதன் பிறகு இது நாடு முழுவதும் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் சுல்கேப்லி கூறினார்.”

























