டாக்டர் மகாதிர் முகமதுவிற்கு இடுப்பு எலும்பு முறிவு; நீண்ட காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை – உதவியாளர் தகவல்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவின் வலது இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பல வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கும் என்று அவரது உதவியாளர் சூஃபி யூசாஃப் தெரிவித்தார்.

“மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மகாதீரின் உடல்நிலை உறுதி செய்யப்பட்டதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.”

“மகாதிர் அடுத்த சில வாரங்களுக்குச் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக அனுமதிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று சூஃபி மேலும் கூறினார்.

சிலாங்கூரில் உள்ள ஸ்ரீ கெம்பங்கானில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததை அடுத்து, இன்று காலைக் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நிறுவனத்திற்கு (IJN) கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் காலை 9 மணியளவில் மகாதீர் பால்கனியிலிருந்து வரவேற்பறைக்கு “செல்லும்” போது நடந்தது, என்று சுஃபி கூறினார்

தன் 100-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களிலேயே, புத்ராஜெயாவில் நடைபெற்ற சுற்றுலா நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட உடல் சோர்வு காரணமாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மகாதீர் மீண்டும் IJN மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.