பெர்சத்து அதன் உச்ச கவுன்சில் உறுப்பினர் சைபுதீன் அப்துல்லாவை இன்று முதல் பதவி நீக்கம் செய்துள்ளது.
பெர்சத்து ஒழுங்குமுறை வாரியம் நேற்று நடத்திய கூட்டத்தின்போது இந்த முடிவை எடுத்ததாக சைஃபுதீனுக்கு இன்று தேதியிட்டு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அரசியலமைப்புச் சட்டத்தின் 9.1.4-வது பிரிவைச் சைபுதீன் மீறியதாகக் குறிப்பிட்ட அந்தக் கடிதத்தில், இந்திரா மஹ்ரோட்டா நாடாளுமன்ற உறுப்பினரின் (MP) குறிப்பிட்ட குற்றம் என்ன என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, சைஃபுதீன் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார், மேலும் அவர் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறினார்.

























