பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் – ஆன்லைன் கல்விக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை

தற்போதைக்கு பள்ளி அமர்வுகள் வழக்கம்போல் தொடரும் என்றும், வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் மற்றும் கற்றல் முறையை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கல்வி இயக்குநர் தலைவர்அசாம் அகமது தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு வீட்டிலிருந்தபடியே கற்பித்தல் மற்றும் கற்றல் முறையை அமல்படுத்துவது முறையை பரிசீலிக்கும் என்றும், இது குறித்த இறுதி முடிவை அமைச்சரவை எடுக்கும் என்றும் நேற்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ கூறியிருந்த நிலையில் இந்த விளக்கம் வந்துள்ளது.

இதற்கிடையில், பொதுத்துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) முறையை அமல்படுத்துவது குறித்து அமைச்சரவை முடிவு செய்யும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இந்த இரு நடவடிக்கைகளும் முன்மொழியப்பட்டுள்ளன; தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ஏற்கனவே வீட்டிலிருந்தே வேலை செய்யும் (WFH) முறையை அமல்படுத்தியுள்ளன.

பள்ளி வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து அசாம் விளக்கம் அளித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலனைப் பாதுகாக்கும் அதே வேளையில், மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கல்வி அமைச்சு விரும்புவதாக அவர் கூறினார்.

 

-fmt