வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தம் 1,515 விபத்துகள் ஏற்பட்டன, இது வியாழக்கிழமையிலான 2,287 விபத்துகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும், ஆனால் உயிரிழப்புகள் ஒன்பது அதிகமாக இருந்தன.

“வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடு முழுவதும் மொத்தம் 3,802 விபத்துக்கள் மற்றும் 43 இறப்புகள் பதிவாகியுள்ளன.”

ஹரிராயா பண்டிகையைக் கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிய நிலையில், நேற்று மொத்தம் 1,515 சாலை விபத்துக்கள் பதிவாகின; இதில் 26 பேர் உயிரிழந்தனர்.

வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், 772 விபத்துக்கள் குறைந்திருந்தாலும், ஒன்பது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையன்று 2,287 விபத்துகள் பதிவாகியுள்ளன, இதில் 17 பேர் உயிரிழந்தனர்.

பண்டிகைக் காலத்தில் நெடுஞ்சாலைகளில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புக்கிட் அமான் அமைப்பு நாடு முழுவதும் 5,544 போக்குவரத்து காவலர்களைப் பணியில் அமர்த்தியது.