ஜொகூரில் மானிய விலையிலான சமையல் எண்ணெய் மூட்டைகளை முறைகேடு செய்ததாக வியாபாரி மீது புகார்

ஜொகூர், மாசாய் பகுதியில் உள்ள தாமான் மெகா ரியா உணவகம் ஒன்றில், மானிய விலையிலான சமையல் எண்ணெய் மூட்டைகள் முறைகேடு செய்யப்பட்டிருப்பதை உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட ஆய்வில், அந்த உணவகத்தின் உரிமையாளர் அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக, மானிய விலை எண்ணெய் மூட்டைகளை வெட்டித் திறந்து, அந்த எண்ணெயைத் திருட்டுத்தனமாகப் பாட்டில்களில் மாற்றியது தெரியவந்ததாக ஜொகூர் மாநில இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா தெரிவித்தார்.

‘மேலும் சோதனையிட்டதில், இந்த முறைகேட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தரிக்கோல், புனல்கள் மற்றும் பாட்டில்கள் போன்ற உபகரணங்களும் அந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன,’ என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.”

அந்த உணவகத்தில் சமையல் எண்ணெய் மூட்டைகள் மட்டுமின்றி, சர்க்கரை மற்றும் கோதுமை மாவு போன்ற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களும் முறையான அனுமதியின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் புரிந்ததாகக் கருதப்பட்டு, அந்த உணவகத்தின் உரிமையாளரும் மேலாளரும் தடுத்து வைக்கப்பட்டனர்”.

முறைகேட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் உபகரணங்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்; பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.

 

 

 

 

-fmt