கோலாலம்பூர் ஹோட்டல் அறையில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 8 பேர் விசாரணை கோரி மனு

ஞாயிற்றுக்கிழமையன்று ஹோட்டல் அறை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட கெட்டமைன் (ketamine) மற்றும் எம்.டி.எம்.ஏ (MDMA) ஆகிய போதைப்பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, இரண்டு மலேசியர்களும் ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளும் மறுத்து, தங்களைக் குற்றமற்றவர்கள் என வாதிட்டுள்ளனர்.

“மலேசியர்கள் இருவருக்கும் தலா 6,000 ரிங்கிட் பிணை வழங்க அனுமதித்த நீதிபதி நுருல் இசா ஹசன் பஸ்ரி, ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளுக்கும் பிணை வழங்க மறுத்துவிட்டார்.”

எட்டு ஆண்கள் இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இங்குள்ள ஒரு ஹோட்டல் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட கெட்டமின் (Ketamine) மற்றும் மெதிலின்டையாக்ஸிமெத்தாம்பெட்டமைன் (MDMA) வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் விசாரணைக்கு முன்னிலையாகினர்.

இரு மலேசியர்களும் ஆறு வெளிநாட்டவர்களும் தலா இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் மஜிஸ்திரேட் நுருல் இஸ்ஸா ஹசன் பஸ்ரி முன்னிலையில் குற்றமற்றவர்கள் என மறுத்து விசாரணை கோரினர் என்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இரு மலேசியர்கள்: ஐவன் வோங் யி சியான் 24, சோங் கிங் ஜுன், 36

ஆறு வெளிநாட்டவர்கள்: ஜென்சன் சோ கா யி 34, லாம் ஹோய் லியூங் 30, ஹென்றீ குணவான் 28, டாங் வாயி 41, ட்ரான் குவாங் ஹா 26, யியோ வேய் செங் 37.

முதல் குற்றச்சாட்டில், மே 24 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஒரு ஹோட்டல் அறையில் 1.5 கிராம் கெட்டமின் வைத்திருந்ததாக எட்டு பேரும் கூட்டாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இரண்டாவது குற்றச்சாட்டில், அதே இடத்திலும் அதே நேரத்திலும் 0.7 கிராம் MDMA வைத்திருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரண்டு குற்றச்சாட்டுகளும் 1952 ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டம் பிரிவு 12(2) மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 34 உடன் இணைத்து பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சமாக ரிம 100,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மஜிஸ்திரேட் இஸ்ஸா, இரு மலேசியர்களுக்கும் தலா ரிம 6,000 ஜாமீன் வழங்க அனுமதித்தார். ஆனால் ஆறு வெளிநாட்டவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இரு மலேசியர்களுக்காக தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோஷிவிந்தர் சிங் ஆஜரானார். வெளிநாட்டவர்களுக்காக தனி வழக்கறிஞர் ஒருவர் ஆஜரானார்.

வழக்கு மீள்முறையீடும் ஆவணங்கள் சமர்ப்பிப்பதற்குமான அடுத்த தேதி ஆகஸ்ட் 27 என நிர்ணயிக்கப்பட்டது.