கென்டிங் ஹைலேண்ட்ஸில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது: 7 நேபாளியர்கள் காயமடைந்தனர்

இன்று மாலை கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் மற்றொரு சுற்றுலா பேருந்து மற்றும் பெரோடுவா அரூஸ் கார் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து, இவர்கள் பயணம் செய்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் ஏழு நேபாள நாட்டினர் காயமடைந்தனர்.

மாலை 5.30 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குனர் சலாஹுதீன் ஈசா தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“36 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த அனைவரும் நேபாள நாட்டினர் ஆவர், அவர்களில் ஏழு பேர் காயமடைந்தனர். பங்களாதேஷ் மற்றும் நேபாள நாட்டினரைக் கொண்ட மற்றொரு சுற்றுலா பேருந்தில் இருந்த பயணிகள் காயமின்றி தப்பினர்,” என்று அவர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரோடுவா அரூஸ் காரின் ஓட்டுநரும், அதில் பயணித்த இரு பயணிகளும் எந்தவொரு காயமுமின்றி தப்பினர் என்று சலாஹுதீன் கூறினார்.

 

 

 

-fmt