முல்லை பெரியாறும் பென்னிகுக்கும்!

கேரளா மற்றும் தமிழ்நாட்டிக்கும் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடு த்துள்ளது முல்லை பெரியாறு. இது இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் பரஸ்பரத்திற்கு ஒரு சவாலாக விளங்கி வருகின்றது.

இப்பிரச்னையில் கேரளாவும் தமிழ்நாடும் இரண்டு வெவ்வேறு நாடுகளைப் போல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

கேரளாவிலிருந்து தமிழர்கள் விரட்டியடிப்பு, தமிழகத்தில் கடைகள் மூடி கண்டனம் தெரிவித்தது, ஐக்கிய நாட்டு சபைப் போல மத்திய அரசு மௌனமாக இருப்பது போன்ற செய்கைகள் வியப்பாக இருக்கின்றது.

இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பொறியிலாளர் பென்னிகுக்கின் பிறந்த நாளை பொங்களாக கொண்டாடியது ஒரு அடிமைத் தனத்தின் வெளிபாடாகவே கருதுகிறேன்.

ஆங்கிலேயேன் அவனது பொருளாதாரச் சுரண்டலுக்காக இந்த அணையைக் கட்டினான்.  அவனை இப்போது தலைவனாக ஆக்கி கூடிய விரைவில் பென்னிகுக்கு கோயில் கட்டி வழிபட்டாலும் ஆச்சரியப்படக் கூடிய விஷயமில்லை…

சலுகைக்கும் உரிமைக்கும் உள்ள வேற்றுமையை தெரிந்துகொள், ஒருவனுக்கு மரியாதை செலுத்துவதா அல்லது வழிபடுவதா என்பதை தீர்மானிக்கவே…