அந்த இரவு விடுதி உரிமம் இன்றி இயங்கி வருவதாகவும், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதாகவும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் 299 ஆண்கள் மற்றும் 118 பெண்கள் உட்பட 417 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று அதிகாலை கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உரிமமின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு இரவு விடுதியில் (nightclub) காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 417 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த இரவு விடுதி உரிமமின்றி இயங்கி வருவதாகவும், அங்கு வாடிக்கையாளர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தி வருவதாகவும் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் அகமத் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்தார்.
இதனையடுத்து இன்று அதிகாலை 2.30 மணி முதல் காலை 10.30 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் 299 ஆண்கள் மற்றும் 118 பெண்கள் உட்பட மொத்தம் 417 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஆவணப் பணிகளுக்காகவும், போதைப்பொருள் பரிசோதனைக்காகவும் டாங் வாங்கி காவல்துறை தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அஸ்வான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
























