இந்தத் தீ விபத்தில் கம்போங் செந்தோசாவில் உள்ள 30 வீடுகளும் தீக்கிரையாகின.
தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ஆறு வீடுகள் ஏற்கெனவே தீயில் முழுமையாகச் சிக்கியிருந்தன.
இன்று காலை தவாவ், ஜாலான் உத்தாரா, ஹில்டாப், கம்போங் செந்தோசா பிளாக் 4 பகுதியில் சுமார் 30 வீடுகளை அழித்த தீ விபத்தில் 12 வயது சிறுவன் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
தவாவ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் மொய்லி மிலின் கூறுகையில், உயிரிழந்த சிறுவன் ஜாக்சன் ஸாக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரது கருகிய உடல் அறையொன்றில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
காலை 6.44 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், 47 வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் சம்பவ இடத்தை வந்தடைந்ததாகவும் துறை தெரிவித்தது. அதற்குள் ஆறு வீடுகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன.
தீயணைப்பு நீர்த்தூண்கள் இல்லாதது, குறுகிய அணுகு பாதைகள் மற்றும் வீடுகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் அமைந்திருந்தது ஆகியவை தீயைக் கட்டுப்படுத்தும் பணிக்குப் பெரும் தடையாக இருந்தன.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பக்ரி ஷரிபுடின் கூறுகையில், தனது குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது.
நான் அவசரமாக வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அங்கு பெரும் குழப்பமாக இருந்தது.
“எங்களால் எங்களுடைய தனிப்பட்ட ஆவணங்களை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற அனைத்தும் தீயில் அழிந்துவிட்டன,” என்றார்.
தீ விபத்தில் உயிரிழந்த சிறுவன் தனது மனைவியின் சகோதரியின் மகன் என்றும் பக்ரி தெரிவித்தார்.
























