அப்பட்டமான குண்டர்தனத்தைப் பார்க்க போலீஸ் தலைவருக்குக் கண்ணில்லையா?

“இந்தப் போலீசார் என்றுதான் பொய் சொல்வதை நிறுத்துவார்கள்?இப்போதுதான் ஒன்று நடந்த மறுநிமிடமே இணையத்தளத்தில் இடம்பெற்றுவிடுகிறதே.”

அம்னோ எதிர்ப்புக் கூட்டம் தடைப்பட்டது

விஜயன்: சிலாங்கூர் போலீஸ் தலைவருக்குக் கண்ணில்லையா அல்லது அறிவிலியா? காணொளியைப் பாருங்கள்.அதன்பின் அங்கே குழப்பம் விளைவிக்கப்படவில்லை; அச்சுறுத்தப்படவில்லை என்று கருத்துரைக்கலாம். இவ்வளவு நடந்திருக்க போலீஸ் எங்கு போனார்கள்? 

அல்லது அம்னோ-பிஎன் ஆதரவாளர்கள் ரவுடிகளாகவும் குண்டர்களாகவும் நடந்துக்கொண்டால் பரவாயில்லையா? சட்டத்தைமீறும் கலாச்சாரத்தைத்தான் போலீஸ் ஆதரிக்கிறதா?

மாறுபட்ட அரசியல் பார்வையுள்ளவர்கள் அமைதியாக கூட்டம் நடத்தும்போது அங்கே சிலர் வந்து தங்குதடையின்றி ரவுடித்தனம் செய்ய முடிவதைக் காண வெறுப்புத்தான் வருகிறது.

மக்கள் போலீசில் புகார் செய்ய விரும்புவதில்லை. ஏனென்றால் புகார் செய்யச் சென்றால் தொல்லைகளுக்குக் காரணமே அவர்கள்தான் என்று புகார் செய்வோர்மீதே போலீசார் பழியைத் திருப்பிப் போடுவார்கள். ஓர் இனத்துக்கு ஆதரவாகவும் மற்ற இனங்களுக்கு எதிராகவும் செயல்படும் போலீஸ் படையில் இதெல்லாம் சாதாரணம்.

உண்மை: ரவுடித்தனத்தில் ஈடுபட்டோரைப் பிடித்துக் குற்றம்சாட்ட காணொளி ஆதாரம் போதும்.இந்த ‘சம்சிங்(குண்டர்கள்) குகளைத் தூண்டிவிட்டவர்கள் ’பெருங் கைகளாக’த்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு துணிச்சல் அவர்களுக்கு வந்திருக்காது.

சிலாங்கூர் போலீஸ் தலைவரின் அறிக்கை, போலீசில் நேர்மை போய்விட்டதைத்தான் காண்பிக்கிறது.

சில நாள்களுக்குமுன், ஜனவரி 16-இல் மலேசியாகினி,  போலீஸ் படை அதன் அதிகாரிகளிடையே உயர்ந்த தரத்தை நிலைநாட்ட பெரும்பாடு பட்டாலும் சிலருக்கு “நேர்மை” என்பதற்கே பொருள் தெரிவதில்லை என்று பினாங்கு போலீஸ் தலைவர் ஆயுப் யாக்கூப் கூறியதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லாருக்கும் நியாயம்: சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா பெரும் பொய்யர்.நடந்ததைக் காண்பிக்க காணொளி இருக்கிறது. அம்னோ குண்டர்களும் மாட் ரெம்பிட்டுகளும் குழப்பம் விளைவிக்கவே அங்கு வந்துள்ளனர்.

இந்தப் போலீசார் என்றுதான் பொய் சொல்வதை நிறுத்துவார்களோ? இப்போதுதான் ஒன்று நடந்த மறுநிமிடமே இணையத்தளத்தில் இடம்பெற்றுவிடுகிறதே. அதனால் பொய் சொல்லாதீர்.

கவனிப்பாளன்: ‘துன்’ என்பதைப் பெயரில் கொண்டு அல்லது விருதாகப் பெற்று ‘துன்’ என்பதற்கே கெட்ட பெயரை ஏற்படுத்திக்கொடுக்கும் நால்வர் இருக்கிறார்கள்.

அவர்களில் முதன்மையானவர் துன் மகாதிர், கோடிக்கணக்கில் கொள்ளயடித்தவர். அடுத்தவர் துன் லிங்.வழக்கு என்ற பெயரில் அவரை வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

அப்புறம் துன் அப்துல் மஜிட் துன் ஹம்சா. அரசுத்தரப்பில் அல்டான்துயா ஷாரீபு கொலைவழக்கை நடத்தியவர்.அவரும், நீதிபதியும் போலீசும் சேர்ந்து  அல்டான்துயாவைக் கொல்லும் நோக்கம் யாருக்கு இருக்குமோ அவரை அல்லது அவர்களைப் பாதுகாக்க ஒரு நாடகத்தையே நடத்தினார்கள்.

இப்போது சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா(மேலே உள்ள துன்னின் சகோதரரோ?).காணொளி நடந்ததைத் தெளிவாகக் காண்பிக்க இவர், அப்பட்டமாக புளுகுகிறார், “ஒன்றுமே நடக்கவில்லை, குடியிருப்பாளர்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள்.அவ்வளவுதான். பிஎன் அல்லது அம்னோ ஆதரவாளர்கள் எவரும் குழப்பம் விளைவிக்கவில்லை”, என்று.

இப்போதெல்லாம் அரசாங்கத்தில் உள்ளவர்கள் உண்மை பேசுவார்கள் என்பதை நம்பவே முடியவில்லை.

குடிமகன்: நடந்ததைக் காணொளி தெளிவாகக் காண்பிக்கும்போது ஒன்றுமே நடக்கவில்லை என்று போலீசார் கூறுவது எப்படி?

மோட்டார் சைக்கிள் கும்பலின் முகங்களைத்தான் காணொளி தெளிவாக காண்பிக்கிறதே.போலீசார் அவர்களை உடனே கைது செய்ய முடியும்.செய்வார்களா?

டாக்டர் ஜேக்கப்:குழப்பத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டும் கூட்டத்துக்குச் செல்வோரைப் பயமுறுத்திக்கொண்டும் இருந்தாரே ஒரு தடியர், அவர் யார்?

பெயரிலி: அந்தத் தடியரை யாருக்காவது அடையாளம் தெரியுமா? போலீசார் தெரியாது என்றுதான் சொல்வார்கள். தடியர் யார் என்பதை மட்டும் சொல்லுங்கள். மற்றதை மக்கள் கவனித்துக்கொள்வார்கள்.

தனா55: துன் ஹிஸான், நீங்கள் யாருக்காக வேலை செய்கிறீர்கள்? உங்களுக்குச் சம்பளம் கொடுக்கும் மக்கள் நியாயம் வேண்டும் என்கிறார்கள். ஒருவர் என்னதான் ஆத்திரப்பட்டாலும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு செயல்படக்கூடாது.

TAGS: