“அவர்கள் தவறு செய்திருந்தால் அவதூறுக்காக உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். விருப்பம் போல் வாங்கலாம்.”
சிட்னியில் அளவு மீறி பொருட்களை வாங்கிக் குவித்தேனா? மறுக்கிறார் ரோஸ்மா
கறுப்பு மம்பா: ரோஸ்மா அவர்களே, உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சிட்னி மார்னிங் ஹெரால்ட் மீது வழக்குப் போடுங்கள். அது வெளியிட்ட செய்தி உண்மை இல்லை என்றால் அவதூறுக்காக உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். அந்த பணத்தைக் கொண்டு நீங்கள் விருப்பம் போல் செலவு செய்யலாம். மக்களாகிய எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. காரணம் அது ஆஸ்திரேலியப் பணம். மலேசிய மக்கள் செலுத்திய வரிப் பணம் அல்ல.
ஸ்டால்வார்ட் நைட்: தாம் தவறு செய்யவில்லை என அவர் நிச்சயம் மறுக்கத்தான் செய்வார். உண்மையில் 325,000 ரிங்கிட்டுக்கு மேல் செல்வு செய்திருக்க வேண்டும். அவர் அதனை ஒப்புக் கொள்வார்.
சுதந்தர மலேசியா: தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக ரோஸ்மா உண்மையில் கருதினால் தமது பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியதற்காக ஆஸ்திரேலிய கட்டுரையாளர் மீது அவர் வழக்குப் போட வேண்டும். அவர் வழக்குத் தொடுக்கா விட்டால் அதில் ஏதோ உண்மை இருப்பதாக நிச்சயம் கருதப்படும். மறுப்பது மட்டும் போதாது.
கீ துவான் சாய்: அவர் “பாதிக்கப்பட்டவரா?” அவர் அளவு மீறி பொருட்களை வாங்கிக் குவித்தார் என மதிப்புமிக்க சிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளேடு ஏன் பொய் சொல்ல வேண்டும்? அது உண்மை இல்லை என்றால் அந்தப் பத்திரிக்கை மீது அவர் வழக்குப் போட வேண்டியது தானே?
லூயிஸ்: ரோஸ்மா, மறுக்க வேண்டிய அவசியமே இல்லை. குற்றம் சாட்டியவர்கள் மீது வழக்குப் போட்டு உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் ஆஸ்திரேலியாவில் நீதித் துறை நியாயமாக நடந்து கொள்ளும் என நீங்கள் எதிர்பார்க்கலாம்.
அந்த ஏடு மீது வழக்குப் போடுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகின்றீர்கள்? கடந்த காலப் பிரதமர்களுடைய மனைவிகள் மீது அவர்களுடைய எதிரிகளோ நண்பர்களோ அளவு மீறி பொருட்களை வாங்கிக் குவித்ததாக குற்றம் சாட்டவே இல்லை. அதிகம் செலவு செய்கின்றவர் என நீங்கள் மட்டும் குறிப்பிடப்படுவது ஏன்?