போலீஸ் சட்டத்துக்குப் பாதுகாவலன்; அம்னோவுக்கு அல்ல!

“நான் போலீசை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்.”

போலீஸ் ரௌடிக் கும்பலுடன் ஒத்துழைத்தது என ABU குற்றம் சாட்டுகிறது

கூக்குரல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் பாதுகாவலன் என்று மட்டும் அது தன்னை கூறிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு நடப்பதாகவும் தெரிய வேண்டும். போலீஸ் ‘அம்னோவைத் தவிர வேறு எதுவானாலும் பரவாயில்லை’ அமைப்பு கடந்த சனிக் கிழமை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலகம் செய்த குண்டர்களை விசாரித்து கைது செய்யாமல் வெறுமெனே நின்று கொண்டிருந்தால் குழப்பம் ஏற்படும்.

அது விரிவான இனக் கலவரத்தை மூட்டி விடக் கூடிய சாத்தியம் இருந்தது. அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. நான் போலீசைக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.  அப்போதுதான் உங்கள் மீது மக்களுக்கு மோண்டும் நம்பிக்கை ஏற்படும்.

அப்டுயூ: அந்த மிக முது நிலை போலீஸ் அதிகாரிகள் பற்றிப் புதிதாக ஒன்றுமில்லை. அவர்களுடைய  பதவி உயர்வு, நல்ல வேலை இடம், மற்ற உபரி சகாயங்கள் எல்லாம் அம்னோ தலைவர்களைச் சார்ந்துள்ளது. அதனால் அவர்கள் அம்னோ தலைவர்களுடைய உத்தரவுகளைப் பின்பற்றி அவர்கள் நலன்களைப் பாதுகாப்பது இயற்கையானது  நியாயமானதும் கூட.

அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் தோல்வி கண்டால் அந்த முது நிலை போலீஸ் அதிகாரிகள் என்ன செய்வார்கள் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அசோகா பிஜே: மலேசிய இந்தியர்களுக்கு ஹிண்ட்ராப் ஏன் தேவை என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். அவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை-குறிப்பாக போலீஸ் அவர்கள் உதை பந்தாகப் பயன்படுத்துகிறது.

முன்னணி: உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களே, அரச மலேசியப் போலீஸ் படையே ஏன் இந்த இரட்டை வேடம்?

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அமைதியாக குந்தியிருப்பு மறியலை நடத்திய போது நீங்கள் முழு ஆயுதபாணிகளாக வந்து அவர்களைக் கலைக்கின்றீர்கள். கைது செய்கின்றீர்கள். ஆனால் இந்த அம்னோ ஆதரவு ரௌடிகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். நீங்கள் அந்த ரௌடிகளுக்கு எதிராக ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை. மாறாக உங்கள் அதிகாரிகள் அந்த ரௌடிகளை ஆதரித்துள்ளனர்.

குடிமகன்: அது வியப்பளிக்கவில்லை. அதனைப் பார்க்கவும் படிக்கவும் வெறுப்பாக இருக்கிறது. போலீஸ்? என்ன? அவர்கள் அம்னோ/பிஎன் ஆதரவுக் குண்டர்கள்.

அடையாளம் இல்லாதவன்: சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா-வின் அறிக்கை எல்லா மலேசியர்களையும் அவமானப்படுத்துகிறது.

அந்த வீடியோவைப் பாருங்கள். அது துன் ஹிசான் சொல்வதைப் போல இல்லை. அது பிரதமர் நஜிப் ரசாக்கிற்குக் கெட்ட பெயரைத் தந்துள்ளது. எங்கே நீதி? நம் நாட்டில் இன்னும் சட்டம் இருக்கிறதா?

லூயிஸ்: அரசு சாரா அமைப்பு ஒன்று அல்லது எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த நிகழ்வை குண்டர்கள் சீர்குலைப்பது இது முதன் முறையல்ல. பல முறை நிகழ்ந்துள்ளது. அதனைத் தடுக்க போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

பாரியஸ்: சிலாங்கூர் தலைமை போலீஸ் அதிகாரி, போலீஸ்காரரைப் போலப் பேசாமல் கலகம் செய்தவர்களுக்கான வழக்குரைஞரைப் போலப் பேசுகிறார். 

விசாரணை தொடங்குவதற்கு முன்னரே வன்முறை ஏதுமில்லை என்றும் கூச்சலாக மட்டுமே இருந்தது என்றும் அவர் சொல்லி விட்டார்.

கமலப்பன்ஸ்: அடுத்த மந்திரி புசாராக விரும்பும் பேராசை பிடித்த ஒருவரே அந்தச் சம்பவத்துக்குப் பின்னணியில் இருக்க வேண்டும்.

திரு பிரிங்ல்ஸ்: அந்தக் கும்பல் வாரிஸ் மலாயா என்று அழைக்கப்படும் அமைப்பைச் சார்ந்தவர்கள். பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி ஏற்பாடு செய்த ‘Ayuh Bersatu Mempertabatkan Aqidah Ummah’ என்ற நிகழ்வில் அவர்கள் கடைசியாகக் காணப்பட்டனர்.

நெருப்பு: அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களை போலீசார் கைது செய்யா விட்டால் வெளிப்படையாகச் சட்டத்தை மீறி சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்ட அந்தக் குண்டர்களில் நீங்களும் ஒருவர் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.