“வரிசெலுத்துவோரின் பணமான ரிம 250 மில்லியன் தவறாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. திட்டங்களுக்குப் பயன்பட்டிருக்க வேண்டிய பணம் கொண்டோ வாங்கவும், சுற்றுலா செல்லவும், பொருள்வாங்கவும் இன்னும் எதற்கெல்லாமோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது”.
ஏஜி: என்எப்சி-இல் குளறுபடி இல்லை,சில குறைபாடுகள்தான் உண்டு
பிரெட் முகமட் அலியாஸ்: தலைமைக் கணக்காய்வாளர் புளுகுமூட்டையை அவிழ்த்துவிட்டு சமாளிக்கப் பார்க்கிறார்.சின்ன பையனுக்குக்கூட தெரியும் 1+1=2 என்பது.ஆனால், ஏஜி 1+1=0 என்கிறார்.
ஷாரிசாட் குடும்பத்தாரிடம் ரிம250மில்லியனைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுங்கள். அப்பணத்தை வைத்திருக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை.
ஜேம்ஸ்: தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் அவர்களே, இனி,பாதிப்பைச் சரிக்கட்ட முடியாது. பாதிப்பு, பாதிப்புத்தான்.
வரிசெலுத்துவோரின் பணமான ரிம250மில்லியன் தவறாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. திட்டங்களுக்குப் பயன்பட்டிருக்க வேண்டிய பணம் கொண்டோ வாங்கவும், சுற்றுலா செல்லவும், பொருள்வாங்கவும் இன்னும் எதற்கெல்லாமோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்நிறுவனம் மோசமான நிலைமையில் இருப்பதை ஆவணங்கள் தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கின்றன.
கோமாளி: என்எப்சி அரசாங்கத்திடம் கடன் பெற்றது. கால்நடை வளர்ப்புக்குக் கொடுக்கப்பட்ட கடன் அது. அதை வைத்து மாடுகள் வாங்க வேண்டும்.ஆனால், இவர்கள் ஆடம்பர கொண்டோமினியம்கள் வாங்கினார்கள்.
நிறுவனம் நட்டக்கணக்கில் நடந்து மொண்டிருக்கிறது. ஆனால், அதன் உயர் நிர்வாகிகள் மட்டும் உயர்ந்த சம்பளங்களைப் பெறுகிறார்கள்.
அனாக்மலேசியா: ‘அங்கீகரிக்கப்பட்ட’ இலக்குகளை மாற்றி நிலமும் சொத்துகளும் வாங்கினால் குளறுபடி ஏற்படாதா, என்ன?
விழிப்பானவன்: இப்படிப்பட்ட திட்டத்தின் விளைவுகளைக் கருவூலம் அறிந்திருக்க வேண்டும். இது, எதிர்பாராத அபாயங்களால் அல்லது திறமைக்குறைவினால் ஏற்பட்ட ஒரு தொழில் தோல்வி அல்ல. தொடக்கத்திலிருந்தே இதில் மோசடி இருந்து வந்துள்ளது.
ஊதுகுழல்: என்எப்சி திட்டத்தில் குறைபாடுகள் நிலவுவதில் வியப்பில்லை.ஏனென்றால் அதன் உயர் அதிகாரிகள் எவரும் மாடுவளர்ப்புப் பற்றி அறிந்தவர்கள் அல்லர்.
அவர்கள் அனைவரும் ஒரு அரசியல் குடும்பத்தின் உறுப்பினர்கள். கொளுத்த சம்பளத்தையும் முதல்-வகுப்புப் போக்குவரத்து வசதிகளையும் இன்ன பிறவற்றையும் அனுபவி ராஜா அனுபவி என்று அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்.இப்படி இருக்கையில் எப்படி ஐயா தொழில் வெற்றிபெறும்?
பெயரிலி: குளறுபடி என்பதையோ வேறு சொற்களையோ பயன்படுத்துங்கள். வார்த்தைப் பிரயோகம் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. மாடு வளர்புக்காகக் கொடுக்கப்பட்ட பொதுமக்கள் பணம் தவறாக முறையில் செலவிடப்பட்டுள்ளது. அதுதான் எங்கள் கவலை.
வீரா: நாளை என்பதே இல்லை என்பதைப் போல் அல்லவா ஷாரிசாட் குடும்பத்தார் செலவு செய்திருக்கிறார்கள். சொந்தமாக சம்பாதித்த பணத்தை அல்ல.புத்ரா ஜெயா கொடுத்த பணத்தை.
எப்படிப்பார்த்தாலும், அத்தொழில் குளறுபடியில் சிக்குண்டிருப்பது உண்மைதான்.
உண்மை சொல்ல வேண்டும்: தலைமைக் கணக்காய்வாளர் அவர்களே! என்ன சொல்லி மிரட்டினார்கள். வேலை போய்விடும் என்றார்களா? கதையை மாற்ற ஏதாவது கொடுத்தார்களா?
அவ்விவகாரம் மீது அறிக்கை விடுக்க இவ்வளவு காலம் காத்திருந்தது ஏன்?
இதுவரை நல்ல பணி செய்து வந்திருக்கிறீர்கள். அதைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
சிவிக்: எப்படி வேண்டுமானாலும் கதையை மாற்றுங்கள்.ஆனால், உண்மை மாறாது.