பெல்டா, அம்னோவின் மகுடத்தில் உள்ள கடைசி ஆபரணம்

“தொழில் கழகமாக மாற்றப்படும் நிகழ்வுகளில் பெரும்பாலும் அரசாங்கப் பிரதிநிதிகள் உட்பட பெரிய பங்குதாரர்களை எதிர்பார்க்கலாம்.

பெல்டா 1.5 பில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையை எதிர்நோக்கும் என அரசு சாரா அமைப்பு ஒன்று எச்சரிக்கிறது

செம்பருத்தி: நீங்கள் எந்த வழியில் பார்த்தாலும் பெல்டா குடியேற்றக்காரர்களுடைய சொத்துக்களைப் பயன்படுத்தி அதிக ஆதாயத்தைப் பெறுவதற்காக அவற்றை பங்குகளாக மாற்றுவது குடியேற்றக்காரகளுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகும்.

அது மோசடி, கொள்ளை அல்லது ஏமாற்று வேலை இல்லையா? ஏழ்மை நிலையில் உள்ள பெல்டா குடியேற்றக்காரர்கள் மீது அரசாங்கம் எப்படி இவ்வளவு கொடுமையான நடவடிக்கையை எடுக்க முடியும் ?

அந்த ஏழை குடியேற்றக்காரர்கள் மீது அரசாங்கத்துக்கு இரக்கமே இல்லையா?

ஸ்விபெண்டர்: அம்னோபுத்ராக்கள் சுரண்டும் மகுடத்தில் உள்ள கடைசி ஆபரணம் பெல்டா எனப்  பலர் கருதுகின்றனர்.

நெடுஞ்சாலைகள், விமான நிறுவனங்கள், போக்குவரத்து, நிதி நிறுவனங்கள், காப்புறுதி, நிலம், சொத்துக்கள், பெட்ரோலியம், எரிபொருள் தொழில்கள், தொடர்புத் துறைகள், தண்ணீர், (கடினமான உழைப்புத் தேவைப்படுவதால் தயாரிப்புத் தொழில் தவிர) எல்லாம் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன. அவற்றை அம்னோவும் அதன் சேவகர்களும் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

கெட்டிக்கார வாக்காளர்: சிறிய குடியேற்றக்காரர்களுக்கு ரொக்க வெகுமதிகள் கவர்ச்சிகரமாகத் தோன்றலாம். அது இயற்கையானது. ஆனால் நிலத்தைப் பறித்துக் கொள்வதுதான் மறைமுகமான நோக்கம். அது தேசியப் பேரிடருக்கு வழி வகுக்கும்.

தொழில் கழகமாக மாற்றப்படும் நிகழ்வுகளில் பெரும்பாலும் அரசாங்கப் பிரதிநிதிகள் உட்பட பெரிய பங்குதாரர்களை எதிர்பார்க்கலாம்.

சிறிய, நடுத்தர நிலையில் உள்ள குடியேற்றக்காரர்கள் தங்களுடைய ஆற்றலை உயர்த்திக் கொள்வதற்கு நாம் உதவ வேண்டும். தரகர்களை தவிர்க்க வேண்டும்.

ஏழை குடியேற்றக்காரர்களுக்கு இழப்பு ஏற்படும் வகையில் அதிக ஆதாயத்துக்காக வீடமைப்புத் திட்டங்களை தொடங்குவதற்கு குத்தகையாளர்களும் வீடமைப்பாளர்களும் எற்கனவே காத்துக் கொண்டிருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சமூக உணர்வுகள் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பலரிடம் அடிப்படை தார்மீகப் பண்புகள் கூட இல்லை.

பிரடோ: அந்தத் திட்டம் மீது பாகுபாடு இல்லாத சுயேச்சையான மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். காரணம் அந்த விஷயம் மிகவும் சிக்கலானது. சாதாரண பெல்டா குடியேற்றக்காரர்கள் அதனைப் புரிந்து கொள்ள முடியாது.

ஹாங் துவா: அந்த நிறுவனத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் சேரக்க வேண்டும் என வலியுறுத்துகின்றவர்களே ஊரறிந்த அப்பட்டமான ஊழல் பேர்வழிகள். அந்த நடவடிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் குடியேற்றக்காரர்களுடய நலன்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. உண்மை நிலை தெளிவாகத் தெரியும் வரையில் அவர்கள் எதுவும் செய்யக் கூடாது.

முரசு: நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொள்ளாமல் குறுகிய கால நன்மைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக அந்த பெல்டா நடவடிக்கை அமைந்துள்ளது.

காற்று தங்களுக்குச் சாதகமாக வீசும் போது பற்றிக் கொள்வதற்கு அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்டது எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது.

பல அரசாங்கக் கொள்கைகள், முடிவுகள் ஆகியவற்றைப் பற்றிய கண்ணோட்டம் இதுதான், சுருக்கமாகச் சொன்னால் அதிகார வர்க்கத்தில் உள்ள ஒரு சிலர் பணம் பண்ணுவதற்கு பொதுமக்களுடைய நீண்ட கால நலன்களை தியாகம் செய்வதற்கு ஒப்பாகும்.

TAGS: