“முஸ்லிம் பெயர் ஒருவரை முஸ்லிமாக்க முடியும் என்றால் கிறிஸ்துவராக இருப்பதற்காக அந்த கிளாபிட் சிறுவனும் பிரதமர் துறையைச் சார்ந்தவருமான இட்ரிஸ் ஜாலாவை நீங்கள் பிடிக்க வேண்டும்.”
சமயத் தகுதி: வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது
பேஸ்: பெயர் மட்டும் ஒரு மனிதை முஸ்லிமாக்கி விட முடியாது. ஆகவே அவர்கள் இந்து பழக்க வழக்கங்களை பின்பற்றுகின்றனர் என உறுதி செய்யப்பட்டால் அவர்கள் அனைவரும் இந்துக்களே. முஸ்லிம்கள் அல்ல. எனவே ஏன் இந்த குழப்பம்?
அடையாளம் இல்லாதவன்_3f51: முஸ்லிம் பெயர்கள். ஏன் இந்த விதண்டாவாதம்? இங்கு சரவாக்கில் நோர்டின்களும் சாலேக்களும் தாஹிர்களும் மைமுனாக்காளும் காஸிம்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களுக்குச் செல்கின்றனர். பன்றி இறைச்சியையும் உண்கின்றனர்.
ஒருவருடைய சமயத்தை முடிவு செய்வதற்கு அந்த மனிதரைத் தவிர வேறு யார் சிறந்த நீதிபதியாக இருக்க முடியும்?
ஒங் குவான் சின்: துரதிர்ஷ்டவசமாக கூட்டரசு நீதிமன்றம் நஜிப் நிர்வாகம் போன்று மேலும் மேலும் நடந்து கொள்கிறது. ஒரு நிலையை எடுக்க வேண்டிய கட்டாயம் வரும் போது அது தனது பொறுப்புக்களிலிருந்து நழுவி விடுகிறது. சில தரப்புக்கள் வருத்தப்படக் கூடாது என்பதில் அது குறியாக இருப்பதாகத் தோன்றுகிறது. அத்தகைய நீதிபதிகள் துணிச்சல் இல்லாதவர்கள். தங்கள் கடமையைச் செய்யத் தவறி விடுகின்றனர். வெட்கக்கேடானது.
ஜெஸ்மின்: சமயச் சுதந்திரம். யாராவது ஒருவர் கிறிஸ்துவராக இருக்க விரும்பவில்லை என்றால் அது எனக்கு வருத்தமளிக்கும். ஆனால் அது தனி நபருடைய உரிமையாகும்.
ஒருவர் முஸ்லிமாக இருக்க விரும்பவில்லை என்றால் அவரை ஏன் நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டும்? தனி நபர் உரிமை எங்கே போனது?
எனது சக முஸ்லிம்களே, தங்களுக்கு நம்பிக்கையுள்ள சமயத்தை தேர்வு செய்ய மக்களை அனுமதியுங்கள். அவர்கள் திசை மாறிச் சென்றால் நாம் அவர்களை மீண்டும் கொண்டு வர பயிற்சி அளிப்போம். பலத்தைப் பயன்படுத்த வேண்டாம். இல்லை என்றால் இறைவனுக்கு ஆத்திரம் ஏற்படும்.
லவர்பாய்: ஜைனா அப்டின் ஹமிட்-க்கு முஸ்லிம் பெயர் உள்ளது. ஆனால் அவர் இந்து பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறார். அதுதான் பிரச்னை என நான் அறிகிறேன்.
அந்த சாதாரண பிரச்னை மீது முடிவு செய்ய முடியாத ஐந்து முஸ்லிம் நீதிபதிகள் நம்மிடையே இருக்கின்றனர். அவர்கள் நீதித் துறை நேரத்தை அதாவது மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அது மிகவும் சாதாரணமான விஷயம். முஸ்லிம் பெயர் ஒருவரை முஸ்லிமாக்க முடியும் என்றால் நீங்கள் ஜயிஸ் அல்லது மாய்ஸ்-ஸை அழைத்து கிறிஸ்துவராகவும் தேவாலயத் தலைவராகவும் இருக்கும் அந்த கிளாபிட் சிறுவனும் பிரதமர் துறையைச் சார்ந்தவருமான இட்ரிஸ் ஜாலாவை பிடிக்குமாறு சொல்ல வேண்டும்.
இந்தோனிசியா அல்லது பாலஸ்தீனத்தில் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்களும் ஒரே பெயர்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலை காணப்படுவதை நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.