உங்கள் கருத்து: “ஊழல் மீதான விசாரணையை எம்ஏசிசி இன்னும் முடிக்காத வேளையில் ஷாரிஸாட் வேலைக்குத் திரும்புவது ஏன்?”
பிகேஆர் மேலும் அதிகமான தகவல்களுடன் ஷாரிஸாட் வேலைக்குத் திரும்புவதை வரவேற்கும்
அடையாளம் இல்லாதவன்_40dc: சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் நாம் வீடு வாங்க வேண்டும் என்றால் வீட்டுக் கடனை எடுக்க வேண்டும். கார் வாங்க வேண்டுமானால் அதற்கு கடன் எடுக்க வேண்டும்.
ஆனால் அந்த அம்னோ அரசியல்வாதி குடும்பத்துக்கு ‘மாட்டுக் கடன்’ கொடுக்கப்பட்டது. அவர்கள் அதனைக் கொண்டு புத்ராஜெயாவில் நிலத்தையும் ஆடம்பர அடுக்குமாடி வீடுகளையும் ஆடம்பரக் காரையும் வாங்கியுள்ளனர். அவர்கள் ஆடம்பரமாக விடுமுறைகளையும் கழித்துள்ளனர். அத்துடன் மட்டுமல்ல தங்களுக்கு ஆடம்பரமாக சம்பளங்களையும் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
ஆகவே அம்னோ பதவிகளுக்கு அவர்கள் போராடுவதில் எந்த வியப்பும் இல்லை. அது எனக்கு ஜார்ஜ் ஒர்வெல் எழுதிய ‘Animal Farm’ நாவலை நினைவுபடுத்துகிறது.
நியாயவாதி: சாதாரண மக்களாகிய நாம் வங்கிகளிடமிருந்து கடன்களை பெறுகிறோம். அவற்றுக்கு மாதந்தோறும் தவணைப் பணமும் செலுத்துகிறோம். அந்தக் கடன்கள் முடியும் போது வட்டியுடன் சேர்த்து அந்தக் கடன் தொகையைக் காட்டிலும் இரு மடங்கு செலுத்தியிருப்போம்.
அந்த அம்னோபுத்ராக்களுக்கு தாங்கள் விரும்பியதை வாங்குவதற்கு பெருந்தொகை கொடுக்கப்படுகிறது. அவர்கள் இப்போது அவை முதலீடுகள் எனத் துணிச்சலாக சொல்கின்றனர்.
ஆனால் அந்தப் பணம் அதற்காக கொடுக்கப்படவில்லை. அரசாங்கம் “முதலீட்டுக்காக எளிய” கடன்களைக் கொடுக்க முடியும் என்றால் நானும் அரசாங்கப் பணத்தைக் கொண்டு என் அடமானங்களுக்கு மறு நிதி பெற விரும்புகிறேன்.
அடையாளம் இல்லாதவன்_4154: ஒரு திட்டத்தின் மீது சாத்திய ஆய்வுகள் தொடரும் வேளையில் நிதிகளை எப்படி விநியோகம் செய்ய முடியும் என்பதை எனக்கு யாராவது விளக்க வேண்டும்.
காரணம் வங்கி அங்கீகரித்த என் கடனை விற்பனைக் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு காத்திருக்கும் போது ஏதாவது செய்ய விரும்புகிறேன்.
சரவாக்டயாக்: அம்னோவில் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் தொடர்ந்து இருப்பது நல்லது. மக்கள் வரிப்பணத்தை அம்னோ எப்படி உறிஞ்சுகிறது என்பதற்கு அவர் வாழும் சின்னமாகத் திகழுவார்.
அமைச்சரவையில் ஷாரிஸாட்டை வைத்திருப்பதின் மூலம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரைப் பாதுகாப்பதும் நல்லது. தாங்கள் பாதுகாக்கப்படுவோம் எனத் தெரிந்துள்ளதால் அம்னோ அரசியவாதிகள் ஊழல் செய்யவும் நமது பணத்தைத் திருடவும் அஞ்ச மாட்டார்கள்.
சக மலேசியன்: அவர் விடுமுறையில் சென்றதின் நோக்கம் பொது உணர்வுகளை சாந்தப்படுத்துவதாகும். ஆனால் நிலவரம் இன்னும் சூடாகவே இருக்கிறது. பிகேஆர் இன்னும் பல விஷயங்களை அம்பலப்படுத்தப் போவதாக மருட்டியுள்ளது.
லிட்டில்ஹான்2: எம்ஏசிசி இன்னும் புலனாய்வை முடிக்கவில்லை. அதற்குள் ஏன் ஷாரிஸாட் வேலைக்குத் திரும்புகிறார்?
ஏபாமோசா: அந்த அம்னோ அரசியல்வாதிகள் உண்மையிலேயே முட்டாள்கள். கேக்கில் பெரிய துண்டை உயர் நிலையில் இருப்பவர்கள் தின்கின்றனர் என்ற சாதாரண செய்தி கூட அவர்களுக்குப் புரியவில்லை. கீழே உள்ளவர்களுக்கு துண்டுகள் மட்டுமே கிடைக்கின்றன.
ஆனால் அந்த பேராசை பிடித்த அம்னோ அரசியல்வாதிகள் பெரிய துண்டைப் பெறுவதற்கு தங்கள் முறைக்காக காத்திருக்க வேண்டும்.ஏழ்மை நிலையில் உள்ள மலாய்க்காரர்களுக்கு போதுமான உணவும் உடையும் கிடைக்கின்றதா என்பது பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.
அவர்கள் பைகள் நிரம்பி, நல்ல உடைகளை அணிந்தால் போதும் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கவே போவதில்லை. என்றாலும் அந்த நடுத்தர, குறைந்த வருமானம் கொண்ட மலாய்க்காரர்கள் அந்தத் திருடர்களுக்கு வாக்களிப்பர்.
என்றாலும் வரும் தேர்தலில் அவர்கள் விழித்துக் கொண்டு மாற்றத்துக்கு வாக்களிப்பர் என நாம் நம்புவோம்.