ஷாரிஸாட் தொடுத்த வழக்கில் தங்களுக்கு வாதாட பிகேஆர் இருவர் வழக்குரைஞர்களை நியமித்தனர்

பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி சுராய்டா கமாருதினும் அதன் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் தங்கள் மீது தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில் தங்களைப் பிரதிநிதிப்பதற்கு நான்கு வழக்குரைஞர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளனர்.

அந்த வழக்குக்கு ஆதாரமில்லை என தாங்கள் கருதுவதாகவும் என்றாலும் ஷாரிஸாட்டை நீதிமன்றத்தில் சந்திக்கத் தாங்கள் தயார் என்றும் சுராய்டா கூறினார்.

“நாங்கள் ஷாரிஸாட்டையும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்தையும் (என்எப்சி)நீதிமன்றத்தில் சந்திக்க  அந்த வழக்கை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு என்எப்சி-யின் இன்னும் அதிகமான அத்துமீறல்களை அம்பலப்படுத்துவோம். நடந்திருக்கக் கூடிய அத்துமீறல்கள், வர்த்தகப் பேரங்கள் குறித்து தெளிவான தோற்றத்தைத் தருவதற்கு நாங்கள் அதிகாரத்துவ ஆவணங்களையும் வழங்குவோம்.”

“என்எப்சி-யுடன் தொடர்பு வைத்துள்ள முக்கியமான பொறுப்பான சாட்சிகளையும் அழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த நாட்டில் நிகழ்ந்துள்ள மிகப் பெரிய ஊழல் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள உதவக் கூடிய அவர்கள் அரசாங்கத்தையும் மற்ற தரப்புக்களையும் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும்,” என்றார் அவர்.

ரஞ்சித் சிங், சிவராசா ராசையா, என் சுரேந்திரன், கோபால் ஸ்ரீனிவாசன் ஆகியோர் சுராய்டாவையும் ராபிஸி-யையும் பிரதிநிதிக்க நியமிக்கப்பட்டுள்ள நான்கு வழக்குரைஞர்கள் ஆவர்.