பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியுள்ளது. சுயேச்சையாக கருத்துக் கணிப்புக்களை நடத்தும் மெர்தேகா மையம் அதனைத் தெரிவித்துள்ளது.
அண்மையில் எரிபொருள், மின்சார விலைகள் உயர்த்தப்பட்டதால் ஏற்பட்ட தாக்கத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளதும் அதனால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளது பற்றி மக்கள் கவலை அடையத் தொடங்கியுள்ளதும் அதற்குக் காரணங்கள் என மெர்தேகா மய்யம் கருதுகிறது.
பெர்சே 2.0 பேரணியை அரசாங்கம் எதிர்கொண்ட விதமும் சில “பாதகமான” தோற்றங்களைத் தந்து விட்டன என்பதையும் அதனாலும் பிரதமருக்கான ஆதரவு சரிந்திருக்கிறது என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு மய்யம் ஒப்புக் கொண்டது.
(இன்னும் வளரும்)