மாபுஸ்: என்எப்சி ஊழலால் தேர்தல் தாமதமாகலாம்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழலால், அரசாங்கம் தேர்தலை விரைவில் நடத்தாமல் தள்ளிப்போடக் கூடும்.

பொதுத் தேர்தல் அடுத்த இரண்டு மாதங்களில் நடக்காது என்பதற்கு அதுவும் காரணம் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார்.

“என்எப்சி விவகாரம் பேயாக வந்து அரசாங்க மற்றும் அம்னோ தலைவர்களை மிரட்டிக்கொண்டிருப்பதால் அரசாங்கம் இப்போதைக்குத் தேர்தலை வைக்காது”, என்று இன்று கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். 

அரசை மிரட்டும் இன்னொரு பிரச்னை அரசு ஊழியர்களின் புதிய சம்பளத் திட்டம்(எஸ்பிபிஏ).அது இன்னமும் மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அத்திட்டத்தின் இப்போதைய வடிவம் சம்பள உயர்வை மேல்மட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அள்ளியும் கீழ்நிலை ஊழியர்களுக்கு கிள்ளியும் கொடுக்கிறது.இதனால், அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்குகளிக்கும் முக்கிய தொகுதியினரான அரசு ஊழியர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

தேர்தல் ஆணையம்(இசி), அழியா மை பயன்படுத்துதல் போன்ற சீரமைப்புகளைச் செய்யத் தொடங்கியிருப்பதுவும் தேர்தல் சிறிதுகாலம் கழித்துத்தான் நடக்கும் என்பதைத்தான் காண்பிக்கிறது என்று மாபுஸ் குறிப்பிட்டார்.

“(மாற்றங்கள் செய்யப்படுவதால்) பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தன் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க இசி-க்கு சில மாதங்கள் பிடிக்கலாம்.”

அவரது கணிப்புப்படி பொதுத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்கலாம்.பேரரசர் அரியணை அமரும் நிகழ்வு அப்போதுதான் நடந்து முடிந்திருக்கும் என்பதால் ஒரு ‘மகிழ்ச்சிச் சூழல்’ நிலவும் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்றவர் ஆருடம் கூறினார்.

“பேரரசர் பதவி ஏற்றுக்கொண்டு விட்டார்.ஆனால்,  இன்னும் அரியணை அமரும் சடங்கு நடக்கவில்லை.பேரரசரின் அரியணை அமரும் சடங்கைத் தொடர்ந்து நிலவும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அரசு தேர்தலை நடத்தலாம்.”

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 13வது பொதுத் தேர்தல் எப்போது நடக்கும் என்பதைக் கொஞ்சம்கூட காண்பித்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்.

ஆனால், பிரதமரும் துணைப் பிரதமர் முகைதின் யாசினும் கடந்த சில மாதங்களாக மாநிலங்கள்தோறும் பயணம் செய்து