டிஎபி இங்கா கோர் மிங் தலை தப்பியது

ஈப்போ மாநகர் மன்ற (எம்பிஐ) டெண்டர் விவகாரத்தில் 2008 ஆம் ஆண்டு டிஎபியின் துணைப் பொருளாளர் இங்கா கோர் மிங் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவரை டிஎபி ஒழுங்குமுறைக் குழு இன்று விடுவித்தது.

குற்றம் சாட்டப்பட்ட இங்கா, பேராக் முன்னாள் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுடின், ஆறு முன்னாள் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சம்பவம் நடந்ததாக கூறப்படும் வேளையில் டெண்டர் குழுவில் அங்கம் பெற்றிருந்த மூன்று எம்பிஐ உறுப்பினர்களுடன் நடத்திய பேட்டிக்குப் பின்னர் அக்குழு இந்த முடிவுக்கு வந்ததாக இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இங்கா தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்ற பிரச்னை எழவில்லை. சட்டமன்ற மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற இங்காவின் தகுதி அவருடைய மனைவி ஒரு நிறுவனத்தின் பங்குதாரராக இருப்பதற்குத் தடையாக இருக்கவில்லை. மேலும், இங்காவுக்கு அந்நிறுவனத்தில் எவ்வித தனிப்பட்ட ஈடுபாடும் கிடையாது.

“டெண்டர் குழு எடுத்த முடிவில் இங்கா தமது செல்வாக்கை பயன்படுத்தி இருந்தால் மட்டுமே உண்மையான சுயநல ஈடுபாட்டு மோதல் ஏற்பட்டிருக்கும்”, என்று அக்குழு கூறியது.

TAGS: