Himpunan Hijau பேரணி இடத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது

குவாந்ததனில் Himpunan Hijau 2.0 பேரணி நிகழ்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தைச் சுற்றிலும் அவசரம் அவசரமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.

லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைக்கப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் மூன்று நாட்களில் அங்கு கூடவிருக்கும் வேளையில் அங்கு வேலி கட்டப்பட்டுள்ளது.

குவாந்தான் நகராட்சி மன்றத்தின் Padang MPK 1 திடலைச் சுற்றிலும் இன்று 2 மீட்டர் உயரத்துக்கு பலகை வேலி அமைக்கப்பட்டதாக குவாந்தான் எம்பி பூஸியா சாலே கூறினார்.

அந்தத் திடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு புட்சால் போட்டி ஒன்றை குவாந்தான் நகராட்சி மன்றம் நடத்தப் போவதாக அறிவிப்பு வைக்கப்பட்டது. இப்போது வேலி கட்டப்பட்டுள்ளது.”

“நான் குவாந்தான் நகராட்சி மன்ற பொது உறவு அதிகாரியுடன் தொடர்பு கொண்டேன். அவர் உடனடியாக ஜுலை மாதம் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டிகளுக்காக Padang MPK 1 திடலை மேம்படுத்தும் திட்டத்துக்கு உதவியாக வேலி அமைக்கப்படுவதாகத் தெரிவித்தார்,” என பூஸியா கூறினார்.

தெமர்லோவிலிருந்து இன்று அவசரம் அவசரமாக கொண்டு வரப்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் அந்த வேலி  கட்டப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.

“தங்களுக்கு இன்று இரவு குவாந்தானில் தங்குவதற்குக் கூட இடமில்லை என அந்தத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.”