அம்னோவைக் குறை சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்: தெங்கு அட்னான்

பக்காத்தான் ராக்யாட் கூட்டணி தான் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கும் சிரமங்களுக்கும் அடிக்கடி அம்னோவையும் பிஎன்- னையும் குறை கூறுவதை அவற்றின் தலைமைச் செயலாளரான தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சாடியிருக்கிறார்.

அம்னோவும் பிஎன்- னும் சரியான கோட்பாடுகளில் அமைந்த அரசியல் அமைப்புக்களாகும். எதிர்க்கட்சிகள் சுமத்தும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் அவை பொறுப்பல்ல என்றார் அவர்.

“அம்னோவுக்கும் பிஎன் னுக்கும் பாதகமான தோற்றத்தை ஏற்படுத்துவதே அவற்றின் நோக்கமாகும்,” என அவர் பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று பினாங்கு பாடாங் கோத்தா லாமாவில் Himpunan Hijau 2.0 பேரணி நிகழ்ந்த போது ஏற்பட்ட குழப்பத்துக்கு அம்னோவும் பெர்க்காசாவுமே காரணம் என டிஏபி தலைமைச் செயலாளரும் பினாங்கு முதலமைச்சருமான லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளது பற்றி அவர் கருத்துரைத்தார்.

“எங்களை குற்றம் சாட்டுவதை அவற்றால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. செம்புரோங்கில் அன்வார் செராமாவின் போது நிகழ்ந்த குழப்ப்பத்துக்கும் அவை எங்களையே குறை கூறின.”

“அவற்றின் தலைவர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட கல்வாத் விவகாரத்திலும் நாங்கள் தான் அதற்குக் காரணம் என அவை கூறின,” என தெங்கு அட்னான் வருத்தத்துடன் சொன்னார்.

பெர்னாமா