அன்வார் “இப்லிஸைப் போன்றவர்” (‘like Iblis) என நஸ்ரி கூறுகிறார்

இஸ்ரேலியப் பாதுகாப்பு குறித்த சர்ச்சைக்குள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டை இழுப்பதற்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மேற்கொள்ளும் முயற்சிக்காக அவரை “இப்லிஸைப் போன்றவர்” என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் வருணித்துள்ளார்.

‘இப்லிஸ்’ என்பது புனித திருக்குர் ஆனில் பிசாசின் பெயர் ஆகும்.

“அவர் ஆழமான சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். அவர் “இப்லிஸைப் போன்றவர்”. தாம் விழும் போது மற்ற அனைவரையும் தம்முடன் இழுத்துச் செல்ல அவர் விரும்புகிறார்.”

“அது போன்று தான் அவர் இப்போது நடந்து கொள்கிறார். ‘நான் மட்டுமல்ல மகாதீரும் இஸ்ரேலை ஆதரித்தார் என அவர் இப்போது சொல்கிறார்.”

மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில் அவர் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எழுதிய மூன்று கடிதங்களை வெளியிட வெளியுறவு அமைச்சு முடிவு செய்துள்ளது பற்றி வினவப்பட்ட போது நஸ்ரி அவ்வாறு கருத்துரைத்தார்.

“அன்வார் இப்போது மிகவும் பயந்து போயிருக்கிறார். காரணம் இஸ்ரேலுடைய பாதுகாப்பு முக்கியம் என அவர் ஒருவர் மட்டுமே கூறியிருக்கிறார்,” என்றார் நஸ்ரி.

மகாதீர் காலத்திலும் அமைச்சராக இருந்துள்ள நஸ்ரி மகாதீரை ஒரு காலத்தில் கடுமையாக  விமர்சனம் செய்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் தமது முன்னாள் எஜமானரைத் தற்காத்துப் பேசினார்.

“அவர் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு போதும் இருந்ததில்லை. அந்த விஷயத்தில் அவர் எப்போதும் ஒரே போக்கைப் பின்பற்றினார். அந்த உண்மை எனக்கு நன்றாகத் தெரியும்,” என்றும் நஸ்ரி கூறினார்.

TAGS: