ஹிண்ட்ராப், பெர்க்காசாவைப் போன்று இனவாத அமைப்பா?

இந்தியர்கள் சபிக்கப்பட்ட ஒர் இனம். அவர்களது பிரச்னைகள் பல வகையானவை. அவர்களுக்கு நியாயம் கேட்பது அனைத்து மலேசியர்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு போராடுவதற்கு ஒப்பாகும்.”

 

 

“எங்கு பிஎஸ்எம் ஹிண்ட்ராப்-பிலிருந்து வேறுபடுகிறது”

மாற்றத்துக்கான வாக்கு: ஹிண்ட்ராப்பை பிஎஸெம்-முடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கண்ணுக்குத் தெரியாத கோட்பாடுகளை காட்டுவதில் சுங்கை சிப்புட் எம்பி டாக்டர் மைக்கல் ஜெயகுமார் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் மலேசிய இந்தியர்களுக்கு புத்துயிரூட்டியது ஹிண்ட்ராப் ஆகும்.

இனவம்சாவளியை மறுப்பதால் இனவாதம் பறந்து விடாது என்பதை பிஎஸ்எம் நினைவில் கொள்ள வேண்டும்.

அலக்ஸி: பெர்க்காசா, மஇகா-வைப் போன்று ஹிண்ட்ராப்-பும் இனவாத அமைப்பு என ஏன் சிலர் சொகின்றனர் என்பதே எனக்குப் புரியவில்லை. ஏன் மசீச, அம்னோவைப் போன்று இனவாத அமைப்பு எனச் சொல்லக் கூடாது? அல்லது இனவாதம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு விசயமா?

உண்மையிலேயே மலேசியனாக இருப்பதாக யாரும் உதட்டளவில் சேவை செய்யலாம். என்றாலும் உங்கள் சமூகம் அனுபவிக்கின்ற அநீதிகளைப் பயன்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதின் மூலம் நீங்கள் உண்மையான மலேசியராகவும் இருக்கலாம்.

இன, வம்சாவளி, சமய வேறுப்படின்றி தாம் அனைத்துத் தொழிலாளர்களுடைய உரிமைகளுக்கும் போராடுவதாக ஜெயகுமார் சொல்லலாம். அது மிகவும் அழகாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை அரசாங்கம் நீங்கள் சொல்வதற்குச் செவி சாய்க்கலாம். தொழிலாளர்களுக்கும் சிறந்த உரிமைகள் கிடைக்கலாம். ஆனால் தொழிலாளர்கள் குறிப்பாக ஜோகூர் அரசாங்கச் சேவையில் இந்தியர்கள் எண்ணிக்கை பூஜ்யம் விழுக்காடு என்பதை மறக்க வேண்டாம்.

இந்து ஒருவர் இஸ்லாத்துக்கு மதம் மாறுகிறார். மதம் மாறாத மனைவியிடமிருந்து தங்கள் பிள்ளைகளை எடுத்துச் செல்கிறார். நீங்கள் அந்த வழக்கை எடுத்துக் கொள்வீர்கள? செய்ய மாட்டீர்கள். காரணம் அவ்வாறு செய்வது இனவாதமாகும். ஆகவே ஹிண்ட்ராப் அந்த அழுக்குப் படிந்த வேலையைச் செய்ய விட்டு விடுவீர்கள்.

ஹிண்ட்ராப் புனிதமானது. அதனிடம் இரட்டை வேடம் கிடையாது. இந்தியர்கள் சபிக்கப்பட்ட ஒர் இனம். அவர்களது பிரச்னைகள் பல வகையானவை. அவர்களுக்கு நியாயம் கேட்பது அனைத்து மலேசியர்களுக்கும் நியாயம் கிடைப்பதற்கு போராடுவதற்கு ஒப்பாகும்.

தடுப்புக் காவலில் இருக்கும் போது மரணமடையும் இந்தியர்களுக்காக ஹிண்ட்ராப் போராடுகிறது. ஜெயகுமார் போன்ற மக்கள் அதில் ஈடுபட்டு தங்கள் கரங்களை அழுக்காக்கிக் கொள்ள மாட்டார்கள். காரணம்  அவர்கள் எல்லா மலேசியர்களுக்குப் போராடுகின்றனர். ஆனால் தடுப்புக் காவல் மரணங்களுக்கு எதிராக இந்தியர்கள் போராடும் போது போலீஸ் தடுப்புக் காவல் நடை முறைகள் மேம்படுத்தப்படும் போது எல்லோரும் பயனடைவார்கள்.

அரசாங்கத்தின் திட்டமிடப்பட இனவாதத்தை ஹிண்ட்ராப் எதிர்க்கிறது. அது இந்தியர்களுக்காக பல வழக்குகளை எடுத்துக் கொள்கிறது. அதன் விளைவாக பிஎன் இனவாதக் கூர்மை மழுங்கினால் அனைவரும் பயன் பெறுகின்றனர்.

ஜின் பியார்: மலேசியாவில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினர் விழித்துக் கொள்வதற்கு ஹிண்ட்ராப் தூண்டுகோலாக திகழ்ந்தது. அநீதிக்கும் கொடுங்கோலுக்கும் எதிராக அனைத்து மலேசியர்கள் குரல் எழுப்புவதற்கு ஹிண்ட்ராப் உத்வேகத்தைக் கொடுத்தது என்றால் தவறு இல்லை.

ஆனால் அந்த நல்ல மருத்துவருடைய கொள்கைகளும் நோக்கங்களும் புனிதமானவை. உண்மையானவை. அவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒப்பா: ஜெயகுமார் நமது தொழிலாளர் அமைச்சரானால் எப்படியிருக்கும் என நாம் கற்பனை செய்து பார்க்கலாமா?

நமது தொழிலாளர்களுடைய அவலங்களை நன்கு உணர்ந்துள்ள ஒருவர் அந்தப் பதவியிலிருப்பது எவ்வளவு சிறப்பாக இருக்கும். அவர் நமது வேலைச் சூழ்நிலைகளை மேம்படுத்துவார். பயனுள்ள தீர்வுகளைக் காண தமது பகுத்தறியும் ஆற்றலை அவர் பயன்படுத்துவார்.

மயோப்101: பிஎஸ்எம் தொடர்ந்து சுயேச்சையாக இயங்க வேண்டும். ஆனால் பக்காத்தான் ராக்யாட்டுக்கு நட்புறவாக இருக்க வேண்டும். கால ஒட்டத்தில் பிஎஸ் எம் அரசியலில் மூன்றாவது பெரிய சக்தியாக நமக்குத் தேவைப்படலாம்.

பிஎன், பக்காத்தான் ஆகியவற்றுக்கு எதிரணியாக இருங்கள். உங்கள் போராட்டத்துக்கு உண்மையாக இருங்கள். அர்த்தமுள்ள போராட்டத்தை நடத்தி முன்னேறுங்கள்.

ஜிம்மி கிரிக்கெட்: அந்த நல்ல மருத்துவர் ஜெயகுமார் சொல்கிறார்: “இந்திய சமூகத்தில் ஒரம் கட்டப்பட்ட பிரிவினர், மலாய்க்காரர்கள் உட்பட மற்ற இனங்களைச் சார்ந்த ஒரம் கட்டப்பட்ட பிரிவுகளுடன் கூட்டணி அமைத்து பெரும் பணக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் சமூக பொருளாதார முறைக்கு சவால் விடுக்க வேண்டும்.”

அதனைச் சுருக்கமாகச் சொன்னால் தேவைகள் இனத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அம்னோ-பிஎன் அல்லது மஇகா அல்லது ஹிண்ட்ராப் போல் அல்லாமல் அரசாங்கம், இன வேறுபாடு காட்டாமல் ஒரங்கட்டப்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் உதவி செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.

TAGS: