500 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மீது கணக்காய்வு தேவை என அமைச்சர் வலியுறுத்துகிறார்

யாயாசான் சிலாங்கூர்,  பிஎன் ஆட்சியின் போது 500 மில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளதாக செல்காட் விசாரணையின் போது சாட்சியமளிக்கப்பட்டுள்ளது மீது தடயவியல் கணக்காய்வை சிலாங்கூர் அரசாங்கம் நடத்த வேண்டும் என சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர் நோ ஒமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவையா அல்லது நடப்பு பக்காத்தான் அரசாங்கம் “மக்களை ஏமாற்ற முயலுகிறதா” என்பதை உறுதி செய்வதற்கு எந்த தடயவியல் கணக்காய்வும் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் என விவசாய அமைச்சருமான  நோ ஒமார் கூறினார்.

“அந்த விசாரணையின் போது தாங்கள் ஆட்சி புரிந்த இரண்டு ஆண்டு காலத்துக்குள் தாங்கள்  1.4 மில்லியன் ரிங்கிட்டைத் தவறாகப் பயன்படுத்தியதை அவர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பதாக நான் கருதுகிறேன். அதனால் அவர்கள் பிஎன் -னை தண்ணீருக்குள் இழுத்துள்ளனர்,” என்றார் நோ ஒமார்.