வெறும் மறுப்புக்கள் மட்டும் போதாது என ராபிஸி பிரதமரிடம் சொல்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது புதல்வி திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்தது என்பதைக் காட்டுவதாகக் கூறப்படும் ஆவணம் உண்மையானதா இல்லையா என்பதை மட்டுமே  தெரிவிக்க வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார்.

அந்தக் குற்றச்சாட்டைப் பிரதமர் அலுவலகம் வெகு வேகமாக மறுத்த போதிலும் ஷாங்ரிலா ஹோட்டலிலிருந்து அனுப்பப்பட்ட Banquet Event Order (BEO) விருந்து நிகழ்வு அளிப்பாணை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றார் அவர். அந்த விருந்துக்கான பதிவும் பணம் செலுத்துவதற்கான உத்தரவுகளும் பிரதமர் அலுவலகத்தினால் வழங்கப்பட்டவை என்பதை அந்த அளிப்பாணை காட்டியது.

“இந்தக் கட்டத்தில் நான் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் கோருவது முதிர்ச்சி இல்லாத செயலாகும். காரணம் அந்த இரண்டு பத்திகளிலும் வெறும் மறுப்புக்கள் மட்டுமே காணப்படுகின்றன. அந்த மறுப்புக்கு உருப்படியான ஆதாரங்கள் ஏதும் தரப்படவில்லை.”

“அத்துடன் பிரதமருக்கு எதிராக வழங்கப்பட்ட அந்த விருந்து நிகழ்வு அளிப்பாணையின் உண்மை நிலை குறித்தும் பிரதமர் அலுவலகம் சர்ச்சை எழுப்பவில்லை,” என ராபிஸி இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.

ஆதாரங்கள் வழங்கப்பட்டால் மட்டுமே நஜிப் புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான செலவுகளுக்குப் பணம் கொடுக்க பொதுப் பணம் பயன்படுத்தப்படவில்லை என மக்கள் மனநிறைவு கொள்வர் என்று கணக்காயருமான அவர் சொன்னார்.

“அவர் அவ்வாறு செய்யா விட்டால் தூய்மையான வெளிப்படையான பிரதமர் என்னும் தோற்றத்தை வழங்க அவர் விரிவான இயக்கத்தை நடத்திய போதிலும் பொதுப் பணத்தை சொந்த ஆதாயத்த்துகுப் பயன்படுத்தும் அவரது மற்ற சகாக்களிடமிருந்து மாறுபட்டவர் அல்ல என்ற எண்ணம் மக்களிடையே உருவாகி விடும்.”

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 17ம் தேதி நடைபெற்ற நஜிப் புதல்வியின் திருமண நிச்சயதார்த்த  விருந்துக்கான 409,767 ரிங்கிட் செலவுகளுக்கான பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டதற்கான விருந்து நிகழ்வு அளிப்பாணை ஆதாரத்தை ராபிஸி நேற்று காட்டினார்.

நஜிப்ப்பின் 23 வயது புதல்வி நூர்யானா நாஜ்வாவுக்கும் கஸக்ஸ்தானைச் சேர்ந்த டேனியர் நாஸர்பாயேவ்-க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

திருமண நிச்சயதார்த்தத்திற்கு முந்திய சடங்குகளுக்காக கடந்த ஆண்டு நஜிப் குடும்பம் கஸக்ஸ்தான் தலைநகர் ஆஸ்தானாவுக்கு சென்று வந்த போது பொது நிதிகள் பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிக் கொண்டதைத் தொடர்ந்தும் சர்ச்சை மூண்டது.