RM500 for BR1M க்கு 500 ரிங்கிட், புதல்வி திருமணத்துக்கு 400,000 ரிங்கிட்

“தங்களுடைய அத்துமீறல்கள் பற்றி பொது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்பதை அறிந்திருந்தும் அவர்கள் இன்னும் அதனைத் தொடருகின்றனர். குறைத்துக் கொள்வதாகவே தெரியவில்லை”

பிரதமர் அலுவலகம் நஜிப் புதல்வி திருமண நிச்சயதார்த்த செலவுகளுக்கு பணம் கொடுத்தது

எம்பிஏ: அது உண்மையானால் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இது தான்: நமது பாசத்துக்குரிய கருணை உள்ளம் கொண்ட பிரதமர் நம்மை ஏமாற்றி விட்டார்.

அவர் நாடு முழுவதும் சென்று மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் குறைவான மொத்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு ஆண்டுக்கு உணவளிப்பதற்கு  BR1M வழியாக 500 ரிங்கிட் கொடுக்கிறார்.

அதே வேளையில் அவர் தமது சம்பந்திகளுக்கும் உறவினர்களுக்கும் தேர்வு செய்யப்பட்ட நண்பர்களுக்கும் (மூவாயிரம் ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள்) தலைக்கு 500 ரிங்கிட் செலவு பிடிக்கும் விருந்தை வழங்குகிறார்.

சரவாக்கியன்_3ff9: இதனை நம்பவே முடியவில்லை. நமது தலைவர்களுடைய பேராசை தீரவில்லை. அவர்களுடைய அத்துமீறல்களும் தொடருகின்றன. தங்களுடைய அத்துமீறல்கள் பற்றி பொது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்பதை அறிந்திருந்தும் அவர்கள் இன்னும் அதனைத் தொடருகின்றனர். குறைத்துக் கொள்வதாகவே தெரியவில்லை.

அது வெறும் 409,767 ரிங்கிட் மட்டுமல்ல. ஏழை மக்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்தக் கூடிய பெரும் தொகையாகும். அவர்களுக்கு வெட்கமே இல்லையா ?

ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: அந்த நிகழ்வு அரசாங்க அல்லது தேசிய நிகழ்வாக இல்லாத வரையில் அரசாங்கம் ஏன் அதற்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும் ?

அந்தக் குற்றச்சாட்டு உண்மையானால் பிரதமர் கருவூலத்துக்கு அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பொதுப் பணம் தங்கள் விருப்பம் போல் பயன்படுத்துவதற்குத் தனிப்பட்ட சொத்து அல்ல என்பது அம்னோ தலைமைத்துவத்துக்கு உணர்த்த வேண்டும். அம்னோ தலைவர்கள் தங்களை ஜமீன்தார்கள் என்றும் மக்களை வேலைக்காரர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்விபெண்டர்: நஜிப், ரோஸ்மா மான்சோர் அவர்களே நீங்கள் தேசியக் கருவூலத்தை உங்கள் சொந்த தனிப்பட வங்கிக் கணக்கு என எண்ணக் கூடாது.

அந்தச் சாதாரணமான ஆனால் முக்கியமான விதியைக் கூட உங்களால் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் இந்த நாட்டை நிர்வாகம் செய்வதற்கு உங்கள் மீது நம்பிக்கை வைக்குமாறு எங்களைக் கேட்டுக் கொள்கின்றீர்கள்.

தனியார் துறையில் அதற்கு இன்னொரு பெயர் உண்டு- அது தான் நம்பிக்கை மோசடி. வங்கி தலைமை நிர்வாகியாக இருக்கும் உங்கள் சகோதரர் நாஸிரைக் கேட்டுப் பாருங்கள். அந்தச் சாதாரண விதி ஏன் மீறப்படக் கூடாது. சகித்துக் கொள்ளப்படக் கூடாது என்பதை அவர் உங்களுக்கு விவரமாக விளக்குவார்.

அவரது ஊழியர்கள் யாராவது நம்பிக்கை மோசடி செய்துள்ளதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்.

அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனை என் எப் சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் இயக்குநர்கள் தங்கள் சொந்தப் பணம் போல பாவித்ததில் வியப்பு ஏதுமில்லை. கோளாறு தலையிலிருந்து தொடங்குகிறது.

அடையாளம் இல்லாதவன்_3ef1: மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்துக்குள் நீங்களும் உங்கள் குடும்பமும் கைகளை விடும் போது நீங்கள் எப்படி நாட்டை வழி நடத்த முடியும் ?

நீங்கள் அளவுக்கு அதிகமாக சென்று விட்டீர்கள். செலவுகளைச் சமாளிக்க மக்கள் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் நீங்கள் எங்களை ஏமாற்றுகின்றீர்கள்.

அனுதாபம்: அது உண்மையானால் நம்பவே முடியவில்லை. அவர்களுக்கு இந்த நாடு சொந்தமானது. பெட்ரோனாஸை யார் கட்டுப்படுத்துகின்றனர் என்பதை சொல்லுங்கள். அதன் பணம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எனக்குச் சொல்லுங்கள்.

ஆனால் மக்களுக்காக அரசாங்கம் என அவர்கள் துணிச்சலாகச் சொல்கின்றனர். பட்டங்களைப் பறக்க விடுவதற்கும் கூட அவர்களுக்கு நேரம் இருக்கும்.

நூர்யானா விருந்துக்கு பணம் கொடுத்ததை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது

லிம் சொங் லியோங்: வெறுமனே மறுக்க வேண்டாம். ஷாங்ரிலா ஹோட்டல் பில்-லைப் பற்றி விளக்குங்கள். விருந்துக்கு அளிப்பாணை கொடுக்க ஏன் பிரதமர் அலுவலகம் பயன்படுத்தப்பட்டது ? தலைமைக் கணக்காய்வாளர் தயவு செய்து அதனை விசாரிக்க வேண்டும்.

அனோமினிம்: அந்தக் கட்சியைச் சார்ந்த ஒவ்வொருவரும் ஒரு குற்றச்சாட்டுக்கு வெறுமனே மறுப்பு தெரிவித்திருப்பதாகத் தோன்றுகிறது.

நீங்கள் நிரபராதி என்றால் அதற்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். நீங்கள் குற்றம் செய்துள்ளதற்கு தெளிவான ஆதாரத்தை மற்றவர்கள் ஏற்கனவே வழங்கியுள்ளனர்