தனிப்பட்ட விருந்துகளுக்கு ஏன் பிரதமர் அலுவலக ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும்?

“ஒன்று நஜிப் பொது நிதிகளை திருட வேண்டும் அல்லது பிரதமர் என்ற முறையில் தமது சக்திக்கு மேல் ஆடம்பர வாழ்க்கையை அவர் வாழ வேண்டும்.”

“பிரதமருடைய பிறந்த நாள் விருந்துக்கு 80,000 ரிங்கிட்டுக்கான பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது”

நெருப்பு: ஷாங்ரிலா ஹோட்டல் மீண்டும் மறுக்கப் போவது மட்டும் நிச்சயம். நஜிப் அந்தப் பில்லுக்கான பணத்தைச் செலுத்தினார் எனக் காட்டும் வகையில் பிரதமர் அலுவலகம் பதிவுகளைத் திருத்தக் கூடும்.

ஆனால் இங்கு ஒரு விஷயம் முக்கியமானது- தனிப்பட்ட விருந்துகளுக்கு ஏன் பிரதமர் அலுவலக ஊழியர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?

கேகன்: எது மோசமானது. நஜிப் தாமே அதற்குப் பணம் கட்டினாரா அல்லது பிரதமர் அலுவலகம் அவருக்காகப் பணம் கொடுத்ததா? எந்த வழியிலும் அவர் பிடியிலிருந்து தப்ப முடியாது.

ஒன்று நஜிப் பொது நிதிகளை திருட வேண்டும் அல்லது பிரதமர் என்ற முறையில் தமது சக்திக்கு மேல் ஆடம்பர வாழ்க்கையை அவர் வாழ வேண்டும்.

அந்த இரண்டு விருந்துக்களுக்கும் மட்டுமே அரை மில்லியன் ரிங்கிட் பில் வந்துள்ளது. மற்ற செலவுகளையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் அந்தக் கணக்கு இன்னும் அதிகமாகும். தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் மனிதர்தான் இவர்.

கெனியோ: மக்கள் தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என மக்களைக் கேட்டுக் கொள்ளும் பிரதமர் தமது பிறந்த நாள் விருந்தில் மலர்களுக்காக 32,000 ரிங்கிட்டைச் செலவு செய்கிறார்.

எல் ஜாய்: உண்மையில் ஒவ்வொரு விஷயமாக வெளியில் வருகிறது. அதற்கு முடிவே  இல்லையா? என்ன இது? நம்மைத் திருடர்களும் கொலைகாரர்களும் ஆட்சி புரிகின்றனரா?

நஜிப் தமது புதல்வி திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான பில்-லுக்கு பணம் கொடுத்தார் என அந்த ஹோட்டல் முதலில் அறிவித்தது. இப்போது மீண்டும் பிறந்த நாள் விழாவுக்கும் அது அறிக்கை கொடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இதே மனிதர் 2008ம் ஆண்டுக்கு முன்னதாக செய்யப்பட்ட தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். நமது நம்பிக்கையைக் கேட்டுக் கொண்டவரும் அவரே. இன்னொரு தவணைக் காலத்துக்கா?

இன்னொரு ஐந்து ஆண்டுகளுக்கு நமது நிதிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை பகற்கொள்ளையன் ஒருவரிடம் கொடுப்பதற்கு மலாய்க்காரர்களும் இந்தியர்களும் அவ்வளவு முட்டாள்களா?

அவருக்கு இன்னொரு முறை அதிகாரத்தை வழங்குவதற்கு நாம் என்ன முட்டாள்களா, அறியாதவர்களா அல்லது பார்வையற்றவர்களா?

ஊட்ஸ்கை: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், சுல்தான்களை களங்கப்படுத்த விரும்பிய போது சுல்தான்களுடைய மித மிஞ்சிய செலவுகள் பற்றி விவரங்கள் நமது நாளேடுகளின் முதல் பக்கத்தில் செய்திகளாக வெளி வந்தன.

அப்போது அது வேலை செய்தது. ஆகவே இப்போதும் அது வேலை செய்யும் என நான் துணிந்து கூறுவேன்.

இரண்டு காசு: சகோதரர் நஜிப் அவர்களே, மக்கள் வரிப்பணத்தை செலவு செய்யும் போது கவனமாக நடந்து கொள்ளுங்கள். எங்கள் வார்ப்பட்டைகளை இறுக்கிக் கொள்ளுமாறு எங்களைக் கேட்டுக் கொண்டது நீங்களே.

முறையான உணவு கிடைக்காமல் பலர் தடுமாறும் போது விலை உயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட உணவை உங்களால் எப்படி ஜீரணிக்க முடியும்?

நீலகிரி: பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் ஒருவர் தமது புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்துக்கும் தமது சொந்த பிறந்த நாள் விருந்துக்கும் பள்ளிக்கூட நிதியைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?

அவர் மீது நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சுங்கை பூலோ சிறையில் அவர் வாசம் செய்ய வேண்டியிருக்கும். அத்துடன் அவரது வேலையும் ஒய்வூதியமும் பறி போகும். ஒரே நாடு இரண்டு சட்டங்கள்.

ஜெரோனிமோ: என் பணம் பயன்படுத்தப்பட்ட இன்னொரு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் நான் அழைக்கப்படவில்லை. அது எப்படி முடியும்?

TAGS: