“2008 தேர்தலில் மூன்று மாநிலங்கள் வீழ்ச்சி அடையும் என்ற அவரது ஆரூடம் உண்மையாகி விட்டதால் அவர் சொல்வதை எல்லாம் வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.”
டைம்: நஜிப் அதிக இடங்களை வெல்லத் தவறினால் போக வேண்டியிருக்கும்
உண்மை ஒளி: நீங்கள் ஒர் ஆற்றைக் கடந்த பின்னரே அதன் ஆழத்தை அறிய முடியும். அது போன்று கடந்த காலச் சம்பவங்களை அவை நிகழ்ந்த பின்னரே நீங்கள் விளக்க முடியும்.
கூர்மையான வர்த்தக அறிவாற்றலைக் கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டு பல தரப்புக்களினால் போற்றப்படும் அந்த முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுடினுக்கு அவருடைய ஆருடங்களுக்கும் கண்ணோட்டத்துக்கும் நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
என்றாலும் சபா, சரவாக்கை தக்க வைத்துக் கொள்வது அல்லது பெரிய அளவில் வெற்றி
பெறுவது எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. பிஎன் அரசியல்வாதிகள் அங்கு கடைப்பிடிக்கின்ற ஊழல் நடைமுறைகளும் நேர்மையற்ற வழிகளும் அதற்கு காரணமாகும்.
சிறந்த மலேசியாவை அடைவதற்கு பக்காத்தான் ராக்யாட் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று நாட்டை ஆட்சி புரிந்தால் நல்லது.
சக மலேசியன்: 2008 தேர்தலில் மூன்று மாநிலங்கள் வீழ்ச்சி அடையும் என்ற அவரது ஆரூடம் உண்மையாகி விட்டதால் அவர் சொல்வதை எல்லாம் வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
டைம்-க்கு ஒரு காலத்தில் செல்வாக்கு இருந்தது. இந்த வயதில் அதுவும் நிறைவான செல்வத்துடன் ( பெரும்பாலும் நேர்மையற்ற வழிகளில்) இருக்கும் அவர் ஏன் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நஜிப் மீண்டும் பிரதமராவாரா என்பது பற்றி அக்கறை கொள்ள வேண்டும்?
ஜிம்மி இங்: அதனை டைம்-மே ஒப்புக் கொண்டுள்ளார். அம்னோபுத்ராக்களை பொறுத்த மட்டில் தேர்தல் என்பது சதுரங்க ஆட்டமாகும்.
மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றுவது பற்றியது அல்ல அது. தேசிய சேவை பற்றியதும் அல்ல அது. நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளையும் பண்புகளையும் பின்பற்றுவது அல்ல அது. தேசியப் பொருளாதாரத்திற்கும் மக்கள் நலனுக்கும் உருப்படியான மேம்ப்பாட்டைக் கொண்டு வருவதும் நிச்சயமாக அதன் நோக்கமல்ல.
அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு நாட்டை வளப்பத்தை தொடர்ந்து சுரண்டுவதும் கொள்ளையடிப்பதும் தான் அது.
நியாயமானவர்: அந்த தேர்தல் ஆட்டத்தை எப்படி ஆடுவது என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தேர்தல் ஆணையத்தில் உள்ள கையாட்கள் மூலம் தேர்தல் நடைமுறைகளை ஏமாற்றுவதுதான் அது.
அடுத்து மருட்டல்களை விடுத்து பொது மக்களிடையே அச்ச உணர்வையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகும்.
பின்னர் எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது, உங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களை சிக்க வைப்பதற்கு லஞ்சம் கொடுப்பது. உங்கள் எலும்பு துண்டுகளுக்கு மயங்கக் கூடிய பலர் இருக்கத் தான் செய்கின்றனர்.
என்றாலும் சில புதிய அம்சங்களை குறைவாக மதிப்பிட்டு விட வேண்டாம். எடுத்துக் காட்டுக்கு மக்கள் சிந்தனை மாறியுள்ளது. இந்த நாட்டைப் புரவலர் முறை வழி சீரழித்துக் கொண்டிருக்கும் உங்களைக் கண்டு மக்கள் வெறுப்படைந்து விட்டனர்.
அரசாங்கத்தின் ஜோடனைகளை முறியடிப்பதற்கு புதிய ஊடகங்கள் முனைப்பாகச் செயல்படுகின்றன. காலம் மாறி விட்டது. பழைய நிலை திரும்பப் போவதில்லை.
கைரோஸ்: நஜிப் உண்மையில் நல்ல பிரதமர். காற்று வீசும் திசைக்கு ஏற்ப மாறுவது போன்ற பலவீனங்கள் அவரிடம் இருக்கின்றன.
தமது நம்பிக்கைகள் மீது அவருக்கே தெளிவு இல்லை. உண்மையில் சில சமயங்களில் அவரது நிலை என்ன என்பது கூடத் தெரியவில்லை. அதிகமாகச் செலவு செய்யும் மனைவி அவருக்கு ஒரு சுமையாகும்.
என்றாலும் நஜிப் சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளார். அவர் வலுப் பெற்று ஊழலுக்கு எதிராக இன்னும் வேகமாகப் போராட வேண்டும் என நான் விரும்புகிறேன்..
அவரை அடுத்துப் பொறுப்பேற்கப் பொருத்தமானவர் யாரும் கண்ணுக்குத் தென்படவில்லை. அதனால் தேர்தலில் பிஎன் -னை அகற்றி விட்டு ஒரு தவணைக்காலத்திற்கு மட்டுமாவது தன்னை நிரூபிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஒரு வாய்ப்பை வழங்குவது மலேசியாவுக்கு நல்லது.
டாக்ஸ்: நஜிப்பின் வாரிசாக இப்போது கருதப்படுகின்றவர் விவேகமானவர் அல்ல.