“இசி சட்டத்தை மீறியுள்ளது என்பதில் ஐயமே இல்லை. அது அரசமைப்பை கழிப்பறைக் காகிதம் போலப் பயன்படுத்துகிறது.”
காலித் வாக்களிக்கும் தொகுதியை மாற்றியதின் வழி இசி சட்டத்தை மீறியுள்ளது
பெர்ட் தான்: மந்திரி புசாரைப் போன்ற மூத்த தலைவருக்கே அது நிகழும் என்றால் யாருக்கும் அது நடக்கலாம். இசி என்ற தேர்தல் ஆணையம் சட்டத்தை மீறியிருந்தால் அகோங்-கால் நியமிக்கப்பட்ட மூத்த இசி அதிகாரிகள் ( தலைவர், துணைத் தலைவர், ஐந்து ஆணையர்கள்) மீது குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட வேண்டும்.
அந்த தவறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்டாலும் செய்யப்படா விட்டாலும் அத்தகைய பொறுப்பற்ற ‘தவறுகளுக்கு’ இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்-பும் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாருமே பொறுப்பு.
இது அவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் சட்டத்திலிருந்து தப்ப முடியாது. சட்டம் இறுதியில் அவர்களைப் பிடிப்பது திண்ணம். மக்கள் அதனை உறுதி செய்வார்கள்.
மூன் டைம்: சிலாங்கூர் என்ன விலை கொடுத்தாவது கைப்பற்ற பிஎன் உறுதி பூண்டுள்ளது என்பதற்கு இது உதாரணமாகும். சிலாங்கூரில் அது தோல்வி கண்டால் அதன் முகத்தில் அரசியல் ரீதியில் விழுந்த அறையாகக் கருதப்படும்.
அந்த அவமானம் நேராமல் தடுக்க பிஎன் எல்லா வகையான தந்திரங்களையும் பின்பற்றும்- எல்லாம் தீயவை- சிலாங்கூரை மீண்டும் ஆட்சி புரிவதே அதன் இலட்சியம்.
அது பக்காத்தான் ராக்யாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும். அது மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். அந்த மாநிலத்தை உங்கள் எதிரிகள் மீண்டும் கைப்பற்ற விட்டு விட்டு விடாதீர்கள்.
அதன் விளைவுகள் மிக கடுமையாக இருக்கும். பிஎன் பழி வாங்கும் எண்ணத்தைக் கொண்டது என்பதை நமக்கு வரலாறு காட்டியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பக்காத்தான் உருவாக்கிய எதனையும் அழிப்பதற்கு அது தயங்காது.
என்னை நம்பவில்லை என்றால் பேராக்கைப் பாருங்கள்.
கேகன்: இசி சட்டத்தை மீறியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. அது அரசமைப்பை கழிப்பறைக் காகிதத்தைப் போலப் பயன்படுத்துகிறது. ‘எல்லைத் திருத்தம்’ என்ற போர்வையில் வாக்காளர்களை தொகுதி மாற்றுவது சட்ட விரோதமானது. காரணம் அதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
எப்போதும் இடைத் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர்கள் ஒரு தொகுதியிலிருந்து இன்னொரு தொகுதிக்கு மாற்றப்படும் நடவடிக்கை நிகழ்கிறது. எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அப்போது மாற்றப்படுகின்றனர்.
லிம் சொங் லியோங்: இசி சட்டத்தை மீறுவது இது முதன் முறை அல்ல. அம்னோவுக்கு தோதாக இருப்பதைப் பொறுத்து இடங்கள் காலியானதாக அல்லது காலியாகவில்லை என அது அறிவித்து வந்துள்ளது. தொகுதி எல்லைக் கோடுகளை நிர்ணயம் செய்யும் போதும் அது சட்டத்தைப் புறக்கணித்துள்ளது.
அது ஆவி வாக்காளர்களைப் பதிவு செய்துள்ளது, காலமான வாக்காளர்களை பதிவேட்டிலிருந்து அகற்றத் தவறியுள்ளது, அந்நிய திடீர் பூமிபுத்ரா வாக்காளர்களை பதிவு செய்துள்ளது, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் குடிமக்களுக்கு வாக்குரிமையை மறுத்துள்ளது, அந்தப் பட்டியல் இன்னும் தொடரும்.
மலேசியாABU: தூய்மையான தேர்தல் இல்லை என்றால் வரியும் இல்லை