சபாஷ் சகோதரிகளே! சகோதரர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு

உங்கள் கருத்து: “அதிகம் அதிகமானோர் முன்வந்து ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்களானால், அரசியல்வாதிகள் ஊழல் செய்யத் துணிய மாட்டார்கள்.”

தூய்மையான நிர்வாகம் கோரி பிஜேயில் மகளிர் போராட்டம்

ஜேம்ஸ்1067: ஆட்சியில் இருப்போர் சொல்லும் சாக்குபோக்குகளைக் கேட்டு சலித்துவிட்டது என்று பொதுமக்கள் உரத்த குரலில் உணர்த்தத் தொடங்கிவிட்டார்கள்.நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் எல்லாவற்றையும் எதிர்த்துப் போராட அவர்கள் தீர்மானித்து விட்டார்கள்.

சகமலேசியன்: பினாங்கு, பேராக், கிளந்தான் போன்ற இடங்களிலிருந்து பேருந்துகளில் வந்து போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

அங்கு சில போலீஸ்காரர்களும்  காணப்பட்டனர்.ஆனால், அவர்கள் கூட்டத்தைவிட்டு விலகியே இருந்தனர்.கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் கிராமப்புறங்களிலிருந்து வந்திருந்தவர்கள்.கூட்டம் நன்றாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில் கலந்துகொண்ட அனைத்து என்ஜிஓ-களுக்கும் பாராட்டு.

சரவாக்கியன்3எப்எப்9: இந்தப் பெண்மணிகளின் துணிச்சலை என்னவென்று சொல்வது!ஆமாம், மற்ற சமூக அமைப்புகளுக்கு என்னவாயிற்று,அவை ஏன் கலந்துகொள்ளவில்லை?

அதிகம் அதிகமானோர் முன்வந்து ஊழலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்களானால், அரசியல்வாதிகள் ஊழல் செய்யத் துணிய மாட்டார்கள்.

ஊழல் இனியும் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்பதை நம் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் உணர வேண்டும். நான் நினைக்கிறேன், உண்மையான எஜமானர் யார் என்பதை மலேசியர்கள் உணர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று. மகளிருக்குப் பாராட்டுகள். 

கைரோஸ்:இதைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் மேலும் பலர் கலந்துகொண்டிருப்பார்கள். வெறுப்படைந்து போயிருப்பவர்கள் பெண்கள் மட்டுமல்ல.எல்லா இனங்களையும் சேர்ந்த மலேசியரும்தான்.

பொதுமக்கள் ஆளும் கட்சியினரின்  அதிகார அத்துமீறல்களைக் கண்டு வெறுப்படைந்துள்ளனர்; வெளிப்படையாக நடைபெறும் ஊழல்களைக் கண்டும் கொஞ்சம்கூட யோசிக்காமல் மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதையும் கண்டு கொதிப்படைந்துள்ளனர்.

ஊழல் தலைவர்களுக்குப் புரிந்தால் சரி.

டேவிட் தான்:சபாஷ் சகோதரிகளே!சகோதரர்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு. 

சைமன் லீ: மகளிரின் செயலைக் கண்டு பெருமை கொள்கிறோம். நாட்டை ஊழலிலிருந்து காக்க அவர்கள் நாட்டுப்பற்றுடன் நடத்தும் போராட்டம் கண்டு ஆண்கள் வெட்கப்பட வேண்டும்.

கிகி:பாராட்டுகள் சகோதரிகளே! பெண்கள் விண்ணில் பாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பது சீனப் பழமொழி.

ஜைட் கோத்தா பாருவில் போட்டியிடுவது உறுதி

புளோக்ஸ்மித்: பார்டி கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம், முதலில் தேர்தலில் போட்டியிடாமல் பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக சொல்லியிருந்தார். இப்போது சொன்னதைமீறி, அது ஒரு வாய்ப்பு அதனால் போட்டியிடப் போவதாகக் கூறுகிறார்.

எதற்கு வாய்ப்பு? பக்காத்தான் ரக்யாட்டின் வாய்ப்பைக் கெடுப்பதற்குக் கெடுக்கும் வாய்ப்பா?.

மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதை மறுபடியும் எண்ணிப் பாருங்கள் ஜைட் அவர்களே.. அவர்களின் நம்பிக்கையை நசுக்கியவராகத்தான் மக்களின் கண்களில் நீங்கள் என்றென்றும் காட்சியளிப்பீர்கள்.

லிம்: ஜைட் தம்மைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்.அந்த மனிதருக்கு ‘கித்தா’ என்பதைவிட ‘சயா’ தான் முக்கியம். 

ஜெரெமி: 2004-தேர்தலில் பிஎன் சார்பில் கோத்தா பாருவில் வாகை சூடியவர் ஜைட். எனவே, இப்போது அத்தொகுதியில் போட்டியிடுவதன்வழி அவர் பிஎன் வாக்குகளைத்தான் சிதறடிப்பார்.

மாற்றரசுக் கட்சி ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிப்பது சந்தேகமே.

TAGS: